Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரேசிலில் உலகக் கோப்பை கால் பந்தாட்டம்.. குரோஷியாவில் பீர் விற்பனை சர்ர்ர்!

ஜாக்ரெப்: பிரேசிலில் நடைபெறும் கால்பந்து காரணமாக ஐரோப்பாவின் குரோஷியாவில் பீர் விற்பனை அதிகரித்து அந்த நாட்டு பொருளாதாரம் வளரும் என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். கடந்த காலங்களில் கால்பந்தாட்டம் நடந்தபோது பீர் விற்பனை உயர்ந்ததைவிட இம்முறை மிக அதிகமாக அளவுக்கு விற்பனை இருக்கும். இதற்கு தொலைக்காட்சிகள் ஒரு காரணம் என்று குரோஷிய ரசிகர்கள் கூறுகிறார்கள்.

வேலையில்லா திண்டாட்டம்

வேலையில்லா திண்டாட்டம்

ஐரோப்பிய நாடான குரோஷியா பொருளாதாரத்தில் நலிவடைந்து காணப்படுகிறது.இந்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு வேலையில்லா திண்டாட்டமும் முக்கிய காரணம். குட்டி நாடான இங்கு 20 சதவீத மக்களுக்கு வேலை கிடையாது. இதனால் மக்கள் கையில் பணப்புழக்கம் குறைந்து காணப்படுகிறது. பணத்தை செலவிடுவது குறைந்துவிட்டால், பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை போன்றவை பாதிக்கப்படும். இவை பாதிக்கப்பட்டால் வேலைவாய்ப்பு மேலும் குறைந்துவிடும். இந்த பொருளாதார விதிதான் குரோஷியாவில் நடைமுறையில் உள்ளது.

கால்பந்தாட்டத்தால் செலவு

கால்பந்தாட்டத்தால் செலவு

பிரேசிலில் நாளை துவங்க உள்ள உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் குரோஷிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். மக்கள் தங்களிடமுள்ள பணத்தை செலவிட தொடங்குவதுதான் இதற்கு காரணம். புட்பால் கிரேசை வைத்து பொருட்களை விற்பனை செய்ய பல நிறுவனங்களும் போட்டி போடுகின்றன.

விளம்பரங்களில் வீரர்கள்

விளம்பரங்களில் வீரர்கள்

குரோஷிய அணி வீரர்களை வைத்து விளம்பர படங்களில் நடிக்கச் செய்து அவற்றின் மூலம் பொருட்களின் விற்பனையை அதிகரித்து வருகின்றன. செருப்பு, டீ-சட்டை, உணவு பொருட்கள் என அனைத்திலும் கால்பந்தாட்ட வீரர்கள் கைவண்ணம்தான். இதனால் அந்த நாட்டில் உற்பத்தி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் ஒரு மாத காலத்தில் இந்த விற்பனை பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீட்டெடுத்த பயிற்சியாளர்

மீட்டெடுத்த பயிற்சியாளர்

உலக கோப்பை போட்டிகளின் தகுதி சுற்றில் தோல்வியை தழுவிய குரோஷியாவால் நான்கு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற கடந்த பிபா கோப்பையில் அந்த நாட்டால் பங்கேற் முடியவில்லை. இதையடுத்து அணியின் பயிற்சியாளர் ஸ்லாவன் பிலிக் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால் பதவியில் தொடர்ந்த அவர், 2 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற யூரோப்பியன் சாம்பியன்ஷிப் போட்டிகளில், குரோஷிய அணியை சிறப்பாக விளையாடச் செய்தார்.

அப்போவே அப்படி..

அப்போவே அப்படி..

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகள் போலந்திலும், உக்ரைனிலும் நடைபெற்றபோது, குரோஷியாவில் இருந்து ரசிகர்கள் அந்த நாடுகளுக்கு சென்று தங்கள் நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர். அதே நேரம் வீட்டில் இருந்தபடி டிவிக்களில் போட்டிகளை பார்த்தவர்கள் சாப்பாடு மற்றும் பானங்களுக்காக செலவிட்ட தொகை மட்டும் 100 மில்லியன் யூரோக்களாம்.

ஊர்கூடி டிவிகளில் ரசிப்பு

ஊர்கூடி டிவிகளில் ரசிப்பு

ஐரோப்பிய சாம்பியன்ஷிப்புக்கே இப்படி சாப்பிட்டு தீர்த்த குரோஷியர்கள், உலக கோப்பையென்றால் வாயை கட்டிக்கொண்டா இருப்பார்கள். பிரேசில் தென் அமெரிக்க நாடு என்பதால் அதிக தூரம் பயணித்து அங்கு சென்று போட்டிகளை பார்க்க பல ரசிகர்கள் தயாராக இல்லை. எனவே வீட்டிலுள்ள டிவிக்களிலும், பார்களிள், ஹோட்டல்களிலுள்ள பிரமாண்ட டிவிக்களிலும் போட்டிகளை கண்டு ரசிக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது உணவு, மதுபானங்களை அருந்தியபடியே போட்டிகளை ரசிக்க உள்ளனர் அந்த நாட்டுக்காரர்கள்.

பீர்தான் டாப்

பீர்தான் டாப்

பானங்களின் விற்பனையில் பீர்தான் முன்னிலையில் இருக்கும் என்று அந்த நாட்டு அரசு கருதுகிறது. ஜெர்மனியில் 2006ல் நடந்த உலக கோப்பையின்போது குரோஷியாவிலுள்ள 7 பீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கூடுதலாக 60 மில்லியன் யூரோஸ் வருவாய் கிடைத்ததாம். எனவே இம்முறை பீர் மூலம் அதிகப்படியான வருவாய் கிடைக்க உள்ளதாக குஷியில் உள்ளனர் அந்த நாட்டு பொருளியல் வல்லுநர்கள். மொத்தத்தில் 300 மில்லியன் யூரோ அளவுக்கு இந்த காலகட்டத்தில் குரோஷியாவில் பணம் புழங்கும் என்று கணி்கப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, June 11, 2014, 15:17 [IST]
Other articles published on Jun 11, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+