Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரேசிலில் கோலாகலமாக தொடங்கியது 20-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா!!

ரியோடிஜெனிரோ: உலகமே எதிர்பார்க்கும் 2014 உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசில் நாட்டின் சா பாலோ நகரில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது.

உலக கோப்பை கால்பந்து போட்டி என்பது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் திருவிழாவாகும். நடப்பு 20-வது உலக கோப்பை கால்பந்து போட்டி தென்னமெரிக்க நாடான பிரேசிலில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.

64 ஆண்டுகளுக்குப் பின்னர்..

64 ஆண்டுகளுக்குப் பின்னர்..

64 ஆண்டுகளுக்கு பிறகு பிரேசிலில் உலக கோப்பை போட்டி நடப்பதால் அந்த நாடு முழுவதும் உற்சாகம் கரை புரண்டோடுகிறது.

அரீனா மைதானம்

அரீனா மைதானம்

பிரேசில் - குரோஷியா அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டம் நடைபெற்ற காரின்தியன்ஸ் அரீனா மைதானத்தில் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஃபீஃபா தலைவர் செப் பிளாட்டர், உலக நாடுகளின் தலைவர்கள், ஹாலிவுட் பிரபலங்கள், விவிஐபிக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நடனங்கள்

நடனங்கள்

பிரேசில் நாட்டின் இயற்கை வளங்கள், மக்களின் வாழ்வோடு கலந்துள்ள கால்பந்து போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள், இசை, நடனம் நடத்தப்பட உள்ளன.

ஜெனிபர் லோபஸ்

ஜெனிபர் லோபஸ்

அமெரிக்க நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸ் மற்றும் பாப் பாடகர் பிட் புல் குழுவினர் ‘அனைவரும் ஒன்றே‘ என்ற உலக கோப்பை கால்பந்துக்கான பாடலை பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

எல் இடி பந்து

எல் இடி பந்து

90 ஆயிரம் விளக்குகள் அடங்கிய எல்இடி பந்து மூலம் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட தொடக்க விழா நிகழ்ச்சியை கால்பந்து அணிகள் விளையாடும் நாடுகள் மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள ரசிகர்கள் விடிய விடிய கண்டு ரசித்தனர்.

அதிகாலை முதல் போட்டி

அதிகாலை முதல் போட்டி

இதைத்தொடர்ந்து 2014 உலக கோப்பையின் முதல் ஆட்டம் நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கியது. போட்டியை நடத்தும் பிரேசிலும், குரோஷியா அணிகளும் களமிறங்கின.

வெல்லும் அணிகள்

வெல்லும் அணிகள்

இத்திருவிழாவில் 32 அணிகள் பங்கேற்கும் நிலையில் பிரேசில், அர்ஜென்டினா, ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய அணிகள் கோப்பையை வெல்லக் கூடும் என எதிர்பார்க்கிறது.

நட்சத்திர வீரர்கள்

நட்சத்திர வீரர்கள்

ரொனால்டோ (போர்ச்சுகல்), லயோனல் மெஸ்சி ( அர்ஜென்டினா), நெய்மர் (பிரேசில்) ஆகிய வீரர்களின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு

போராட்டங்கள்

போராட்டங்கள்

அதே நேரத்தில் உலக கோப்பையை பிரேசில் நடத்த எதிர்ப்பு தெரிவித்தும் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பின் தங்கிய நாடான பிரேசில், ரூ.84 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இப்படி ஒரு ஆடம்பர விளையாட்டை நடத்துவது அவசியமா? என்பது எதிர்ப்பாளர்களின் கேள்வி.

கால்பந்து திருவிழா தொடங்கும் முன்பாக சாவ் பாலோ நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக் குழுவினரை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களும் பதில் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

Story first published: Friday, June 13, 2014, 9:06 [IST]
Other articles published on Jun 13, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+