Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கீப்பர்கள் விஸ்வரூபத்தால் கோல் அடிக்க திணறும் வீரர்கள்: களைகட்டுது உலக கோப்பை

ரியோடி ஜெனிரோ: விஸ்வரூபம் எடுத்துவரும் கோல் கீப்பர்களால் உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கோல்மழை பொழிந்துவந்த நிலை மாறி பிரபல அணிகளே கோல் போட முடியாமல் டிரா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் குரூப் எப் பிரிவு பந்தையத்தில் ஈரானும், ஆப்பிரிக்க அணியான நைஜீரியாவும் மோதின. இரு பக்கத்திலும் கோல் கீப்பர்கள் வலுவாக இருந்ததால் அந்த போட்டியில் எந்த அணியும் கோல் போட முடியாமல் டிராவில் முடிந்தது ஆட்டம். நடப்பு உலக கோப்பை போட்டியின் முதலாவது டிரா அதுதான்.

டிராதான் இப்போது டிரெண்ட்

டிராதான் இப்போது டிரெண்ட்

இப்போது போட்டி டிரா ஆகுவது தொடர்கதையாகிவிட்டது. நேற்று குரூப் எச் பிரிவில், ரஷ்யா மற்றும் தென்கொரியா மோதிய போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. மற்றொரு ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பிரேசிலும், மெக்சிகோவும் மோதின. போட்டியை நடத்தும் நாடு பிரேசில். அதுமட்டுமல்லாமல் நெய்மர், ஆஸ்கார் போன்ற அதிரடி வீரர்கள் அந்த அணியிலுள்ளனர். இதுபோன்ற சாதக அம்சங்களை வைத்துக் கொண்ட பிரேசிலால் நேற்றைய ஆட்டத்தில் ஒரு கோல் கூட போட முடியவில்லை.

பிரேசில் ஆதிக்கம்

பிரேசில் ஆதிக்கம்

ஆட்டத்தின் பெரும்பகுதி பிரேசில் வீரர்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஆனால் எதிரணி வீரர்கள் விரட்டிய பந்தை லாவகமாக தடுத்து அசத்தினார் மெக்சிகோ கோல்கீப்பர் கில்லர்மா ஒகாவ். பிரேசில் வீரர்களின் ஆக்ரோஷமான தாக்குதலுக்கு தாக்குப்பிடித்த கில்லர்மா ஒகாவின் செயல்பாடு அனைத்து ஊடகங்களாலும் பாராட்டப்பட்டது. சொந்த நாட்டு ரசிகர்கள் ஆரவாரத்தின் நடுவே ஓங்கி உதைக்கும் வீரர்களுக்கு எதிராக பந்தை பிடிப்பது என்பது லேசுபட்டது கிடையாதே.

அந்தரத்தில் பறந்த கீப்பர்

அந்தரத்தில் பறந்த கீப்பர்

ஆட்டம் தொடங்கிய 25வது நிமிடத்தில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அடித்த பந்தை அந்தரத்தில் பறந்தபடி தடுத்து சிலிப்பூட்டினார் கில்லர்மா ஒகா. 86வது நிமிடத்தில் நெய்மர் அடித்த ஃப்ரி கிக்கை தனது தலையில் தாங்கி அதை கோல்கம்பத்துக்குள் திருப்பினார் பிரேசில் வீரர் சில்வா. ஆனால் அசால்டாக கிரிக்கெட்டில் கேட்ச்பிடிப்பது போல பிடித்து தள்ளினார் கில்லர்மா ஒகா. வெறுத்துப்போயினர் பிரேசில் வீரர்கள்.

சீசர் மட்டும் சளைத்தவரா..

சீசர் மட்டும் சளைத்தவரா..

ஆட்ட நேரம் முடிவடைந்த பிறகும் இரு அணிகளும் கோல் எதுவும் போடாததால், கூடுதலாக 3 நிமிடங்கள் கொடுக்கப்பட்டன. அந்த நேரத்தில் மெக்சிகோ வீரர் அடித்த பந்தை பிரேசில் கோல் கீப்பர் ஜூலியோ சீசர் அபாரமாக பிடித்து தானும் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்தார். ஆகமொத்தத்தில் போட்டி டிரா ஆனதால் இரு அணிகளும் தலா 1 புள்ளியை பகிர்ந்து கொண்டன.

இப்படி ஒரு கீப்பரா?

இப்படி ஒரு கீப்பரா?

போட்டிக்கு பிறகு மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் மிகுவேல் கில்லர்மா ஒகாவ், பேசுகையில், "கில்லர்மா ஒகாவுக்கு ஈடாக ஒரு கோல் கீப்பரை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை" என்றார்.

இனிதான் இருக்கு ஆட்டம்

இனிதான் இருக்கு ஆட்டம்

இது ஒருபக்கம் என்றால் ரஷ்யா கோல்கீப்பர் கெர்சாககோவ் செயல்பாடும் வெகுவாக புகழப்பட்டது. தென்கொரியாவுடனான போட்டி டிராவில் முடிவடைய ரஷ்ய கோல் கீப்பர் முக்கிய பங்காற்றியுள்ளார். கோல்கீப்பர்கள் செயல்பாட்டை பார்க்கும்போது இனிதான் முன்வரிசை வீரர்களுக்கு அதிக சிரமம் இருக்கும் என்று தெரிகிறது. நினைத்த நேரத்தில் எல்லாம் கோல் போட்டுவிட்டு திரும்ப முடியாது.

Story first published: Wednesday, June 18, 2014, 13:20 [IST]
Other articles published on Jun 18, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+