உலகக் கோப்பை-டாஸ் வென்றது தெ. ஆப்பிரிக்கா-சரிவுடன் தொடங்கியது மே.இ. தீவுகள்

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று தென் ஆப்பிரிக்கா-மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பைப் போட்டி தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரீம் ஸ்மித் முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்து, மேற்கு இந்தியத் தீவுகள் அணியை பேட் செய்ய பணித்தார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி இரு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியாகும். ஆனால் அது பழம் பெருமையாகி விட்டது. இப்போதுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி பழைய பெருமையை மீட்க கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது.
மறுபக்கம் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத அணியாக திகழ்கிறது, பலம் இருந்தும் பயில்வானாக முடியாமல் தவிக்கும் தென் ஆப்பிரிக்கா.
எனவே இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
அணிகள்:
தென் ஆப்பிரிக்கா: கிரீம் ஸ்மித், ஹஷீம் அம்லா, ஜான் போத்தா, ஏப் டிவில்லியர்ஸ், டுமினி, பாஃப் டு பிளஸ்ஸிஸ், ஜேக்கஸ் கல்லிஸ், மார்னி மார்க்கல், ராபின் பீட்டர்சன், டேல் ஸ்டெயின், இம்ரான் தஹீர்.
மேற்கு இந்தியத் தீவுகள்: டேரன் சமி (கேப்டன்), டேவன் தாமஸ், சுலைமான் பென், டேரன் பிரேவோ, டிவியன் பிரேவோ, ஷிவ்நலைன் சந்தர்பால், கிறிஸ் கெய்ல், கிரன் போலார்ட், கெமர் ரூச், ராம் நரேஷ் சர்வான்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications