மும்பை: உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் தேர்வாளர் குழு வருகிற 17ம் தேதி தேர்வு செய்து அறிவிக்கவுள்ளது.
ஏற்கனவே 30 பேர் கொண்ட ஒரு உத்தேச அணியை இந்திய தேர்வுக் குழு அறிவித்துள்ளது. அதிலிருந்து இறுதியாக செல்லப் போகும் 15 பேரை தேர்வுக் குழு அறிவிக்கவுள்ளது.
இதுகுறித்து கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜனவரி 17ம் தேதி சென்னையில் நடைபெறும் தேர்வுக் கூட்டத்தில் தேர்வாளர் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்றார்.
ஐசிசியின் விதிமுறைகளுக்கு ஏற்ப அணி தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.