For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் உலக கபடி லீக்.. விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது!

டெல்லி: சத்தம் போடாமல் தொடங்கி ஆரவாரமாக நடந்து வரும் உலக கபடி லீக் போட்டிகள் ரசிகர்களைக் கவர்ந்திழுக்க ஆரம்பித்துள்ளன. ரசிகர்கள் கூட்டம் போட்டிகளுக்குக் கூடி வருவதால் போட்டி அமைப்பாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

அதேசமயம், சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து பெரிய அளவில் யாரும் பேசாமல், ஆதரவு தராமல் இருப்பதால் போட்டி அமைப்பாளர்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனராம்.

இந்தியாவின் முன்னணி கபடி வீரர்களும், சர்வதேச அளவில் பிரபலமான வீரர்களும் இதில் கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர். பல முன்னணி திரை நட்சத்திரங்கள் பல அணிகளை வாங்கி போட்டியை கலர்ஃபுல்லாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீரர்கள் மீது வெளிச்சம்

வீரர்கள் மீது வெளிச்சம்

இந்தத் தொடர் மூலம் பல வீரர்களின் முகங்கள் மக்களுக்கு மேலும் நெருக்கமாகியுள்ளது. இதனால் வீரர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிரிக்கெட் வீரர்களைப் போல தாங்களும் பிரபலமடைவோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்துள்ளது.

ஆட்டோகிராப் கேட்கும் அளவுக்கு

ஆட்டோகிராப் கேட்கும் அளவுக்கு

அஜய் தாக்கூர் என்ற வீரர் கூறுகையில், இப்போது எனது முகம் டிவியில் பளிச்சிடுகிறது. இது பெருமையாக உள்ளது. அதை விட என்நிடம் பலரும் குறிப்பாக குழந்தைகள் ஆட்டோகிராப் கேட்கிறார்கள். இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார் அவர்.

8 அணிகள்

8 அணிகள்

இந்த உலக கபடி லீக்கில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் போல வீரர்களை ஏலத்தின் மூலம் தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சாரு சர்மாதான் இந்தத் தொடரை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

கபடிப் போட்டிகளுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் நல்ல ஆதரவு காணப்படும். அதிலும் கிராமப்புறங்களில் கபடிதான் நேஷனல் கேம் போல. எனவே இந்த உலக கபடித் தொடருக்கும் கூட நல்ல ஆதரவு காணப்படுகிறது.

டிவிட்டர் - பேஸ்புக் தூங்குதே

டிவிட்டர் - பேஸ்புக் தூங்குதே

ஆனால் பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் சகட்டுமேனக்கு பல தரப்பு விஷயங்களையும் அலசும் நம்மவர்கள், இந்த உலக கபடிப் போட்டித் தொடர் குறித்து எதுவுமே பேசாமல் அமைதியாக இருப்பது சாரு சர்மா உள்ளிட்ட போட்டி அமைப்பாளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

கிரிக்கெட்டை விட பெரிய விளையாட்டு

கிரிக்கெட்டை விட பெரிய விளையாட்டு

உண்மையில் கிரிக்கெட்டை விட பிரபலமானது, பாரம்பரியமானது இந்த கபடி. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் என மொத்தம் 35 நாடுகளில் கபடி பிரபலமாக உள்ளது. கடந்த 1990ம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியதான் தொடர்ந்து 7 முறை தங்கப் பதக்கத்தைத் தட்டியது என்பது நினைவிருக்கலாம்.

Story first published: Friday, August 8, 2014, 16:26 [IST]
Other articles published on Aug 8, 2014
English summary
Despite years as one of the India's top players of kabaddi -- a traditional contact sport that mixes tag and wrestling -- Ajay Thakur was not well known in his homeland. Until now. Since the high-profile launch last month of a new Pro Kabaddi League, with live television coverage, corporate sponsors and brightly coloured lycra strips, the 27-year-old has become an overnight sensation. The new league has given a new lease of life to kabaddi, which has been played in sandy backyards across India for generations.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X