Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் டிராபி-பாக்.கை வீழத்தி பைனலுக்கு நியூசி. தகுதி

ஜோகன்னஸ்பர்க்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய அரையிறுதியில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை வீழத்தியது. நேற்று பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது அரையிறுதி போட்டி நடந்தது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் இம்ரான் நசிர் 28, அக்மல் 24 ரன்கள் எடுத்து சுமாரான துவக்கம் தந்தநிலையில் வரிசையாக அவுட்டானார்கள். அடுத்து வந்த சோயப் மாலிக் 2, கேப்டன் யூனுஸ் 15 ரன்களுக்கு அவுட்டாக பாகிஸ்தான் இக்கட்டில் சிக்கி கொண்டது.

இந்நிலையில் களமிறங்கிய முகமது யூசுப், உமர் அக்மலுடன் ஜோடி சேர்ந்தார். யூசுப் 45, உமர் அக்மல் 55 ரன்கள் அணியின் மானம் காத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேற பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் 233 ரன்கள் எடுத்தது.

இதை சேஸ் செய்த நியூசிலாந்துக்கு மெக்கலம் 17, ரெட்மான்ட் 31, குப்டீல் 11 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். இதையடுத்து ஐந்தாவது வீரராக வந்த எலியட் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். இவர் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் எடுத்தார்.

ரோஸ் டெய்லர் 38, வெட்டோரி 41 ரன்கள் எடுத்து, அவுட்டாகினர். நியூசிலாந்து 47.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதும் பைனல் நாளை நடக்கிறது.

Story first published: Wednesday, December 7, 2011, 18:31 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+