For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக சாம்பியன் பட்டம் எதிர்பாராதது - கோனேரு ஹம்பி

விஜயவாடா : உலக சாம்பியன் பட்டம் எதிர்பார்க்காமல் கிடைத்த வெற்றியாகும் என்றும் தன்னுடைய கனவு தற்போது நனவாகியுள்ளதாகவும் இந்திய செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற உலக ரேபிட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கோனேரு ஹம்பி பிளிட்ஸ் போட்டியில் தோல்வியுற்றார்.

குழந்தை பேற்றுக்காக இரண்டு வருடங்கள் ஓய்வில் இருந்த கோனேரு ஹம்பி, கடந்த ஆண்டில் தொடர் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தனது முதல் உலக வெற்றியை அவர் கொண்டாடி வருகிறார்.

ஆந்திராவை சேர்ந்த கோனேரு ஹம்பி

ஆந்திராவை சேர்ந்த கோனேரு ஹம்பி

இந்தியாவின் நம்பிக்கைக்குரிய செஸ் வீராங்கனையாக திகழ்ந்துவரும் ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்த கோனேரு ஹம்பி கடந்த ஆண்டில் பல போட்டிகளில் பங்கேற்று ஆடி வருகிறார்.

உலக சாம்பியன் பட்டம்

உலக சாம்பியன் பட்டம்

இரண்டு ஆண்டுகள் குழந்தை பேற்றுக்காக ஓய்வில் இருந்த கோனேரு ஹம்பி, கடந்த ஆண்டில் மகளிர் கிராண்ட்ப்ரீ, மொனாக்கோ போன்ற போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். ஆயினும் அவருக்கு ஆரம்பத்தில் சில போட்டிகள் மோசமான அனுபவத்தை தந்தது.

வெற்றி பெற்ற ஹம்பி

வெற்றி பெற்ற ஹம்பி

கடந்த சனிக்கிழமை ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் சாம்பியன் போட்டியில் கோனேரு ஹம்பி வெற்றி பெற்றுள்ளார்.

"எதிர்பாராமல் கிடைத்தது"

இது தன்னுடைய முதல் உலக சாம்பியன் பட்டம் என்று கூறியுள்ள கோனேரு ஹம்பி, தான் உலக சாம்பியன் ஆவேன் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது இந்த பட்டம் தான் எதிர்பாராமல் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கோனேரு ஹம்பி நம்பிக்கை

கோனேரு ஹம்பி நம்பிக்கை

நீண்ட இடைவெளிக்கு பிறகு விளையாடுவது எளிதானதல்ல என்று கூறியுள்ள ஹம்பி, தொடர்ந்து வெற்றிகளை குவிக்க போராடுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். வரும் மே மாதம் இத்தாலியில் நடைபெறவுள்ள கிராண்ட்ப்பிரீ போட்டியில் தான் விளையாட உள்ளதாகவும் கூறினார்.

வெற்றியை கொண்டாடும் நேரம்

வெற்றியை கொண்டாடும் நேரம்

தன்னுடைய குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இன்றி தன்னுடைய வெற்றி சாத்தியமில்லை என்று கூறியுள்ள ஹம்பி, வரும் மாதங்களில் பல போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாகவும், முன்னதாக தன்னுடைய தற்போதைய வெற்றியை கொண்டாட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Story first published: Friday, January 3, 2020, 11:40 [IST]
Other articles published on Jan 3, 2020
English summary
World title Triumph is an Unexpected victory
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+