For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று தெ.ஆ-ஹாலந்து; இங்.-நியூசி. மோதல்

By Staff

பாசடரே:வலுவான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்றைய போட்டியில் சந்திக்கின்றன. மற்றொரு போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி,ஹாலந்து அணியுடன் மோதுகிறது.

ஏ பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்காவும், ஹாலந்தும் மோதும் போட்டி பாசடெரே மைதானத்தில் நடைபெறுகிறது. உலகின் நம்பர் ஒன் அணி என்றபெருமையுடன் உள்ள தென் ஆப்பிரிக்கா, கத்துக்குட்டி அணியான ஹாலந்தை சந்திக்கிறது. இப்போட்டி கிட்டத்தட்ட பயிற்சி ஆட்டம் போலவேஇருக்கும் என்பதில் பெரிய எதிர்பார்ப்பு இல்லை.

இருப்பினும் ஹாலந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா ரன் குவிப்பில் ஈடுபடும் என்பதால் எத்தனை ரன்களை தென் ஆப்பிரிக்கா குவிக்கப்போகிறது என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் ஹாலந்து அணியின் பந்து வீச்சு சற்றே சிறப்பாக இருந்தது. வலிமை வாய்ந்து ஆஸ்திரேலியஅணியின் 6 விக்கெட்டுகளை ஹாலந்து வீழ்த்தியதே ஒரு பெரும் சாதனை. அத்தோடு, பட்டிங்கிலும் 40 ஓவர்கள் வரை அவர்கள் நிலைத்துநின்றதும் ஆச்சரியமான விஷயம்.

எனவே தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியிலும் தங்களது திறமையைக் காட்ட ஹாலந்து முனையும். மறு பக்கம் தென் ஆப்பிரிக்கா அணி,பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் கூடுதல் பலத்துடன் காணப்படுகிறது.

எனவே இன்றைய போட்டி சிங்கத்துக்கும், சிறு சுண்டெலிக்கும் இடையிலான போட்டி போலவே இருக்கும்.

வீரர்கள்:

தென் ஆப்பிரிக்கா - கிரேம் ஸ்மித், ஜேக் கல்லீஸ், போஸ்மன், டிவில்லியர்ஸ், பெளச்சர், கிப்ஸ், ஆண்ட்ரூ ஹால், ஆலன் கெம்ப், லாங்வெல்ட், டினி,பீட்டர்சன், ஷான் போலாக், ஆஷ்வல் பிரின்ஸ், டெலிமேகஸ்.

ஹாலந்து -லூக் வான் ட்ரூஸ்ட், டிம் டீ லீட், பாஸ் ஸூய்டரன்ட், டீன் வான் பஞ்ச், ஜெரோன் ஸ்மிட்ஸ், எட்கர் ஷிபரேலி, ரியான் டென் டோஸ்சேட்,பீட்டர் போரன், அலெக்ஸி கெர்வீஸ், டேரன் ரீக்கர்ஸ், பில்லி ஸ்டெல்லிங், அப்துல் ராஜா, முகம்மது கஷீப், மார்க் ஜோங்க்மேன், எரிக்ஸ்வர்க்சின்ஸ்கி.

சி பிரிவில் கிராஸ் தீவில் நடக்கும் போட்டியில் வலிமை வாய்ந்த இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியேரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு அணிகளும் சம பலம் வாய்ந்தவை என்பதாலும், நியூசிலாந்து அணியில் ஆல்ரவுண்டர்கள் ஆதிக்கம் அதிகம் இருப்பதாலும் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்த இரு அணிகளும் இதுவரை உலகக் கோப்பையை வென்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணியும், இங்கிலாந்தும்சமீபத்தில் ஆஸ்திரேலியாவை மாறி மாறி தோற்கடித்து அசத்திய அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், காயமடைந்துள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.அதேசமயம், கேப்டன் மைக்கேல் வாகன், பீட்டர்சன் ஆகியோர் புது பலத்துடன் விளையாட ஆயத்தமாகியுள்ளனர்.

நல்ல பேட்ஸ்மென், பவுலர்கள் என இங்கிலாந்து அணி பலமாகவே உள்ளது.

அதேபோல நியூசிலாந்து அணியும் சிறப்பான வீரர்களுடன் இங்கிலாந்தை சந்திக்கத் தயாராக உள்ளது. இந்த அணியில் ஆல்ரவுண்டர்கள் அதிகம்என்பது கூடுதல் பலம்.

நட்சத்திர வீரர் கிரேக் மெக்மிலன் காயமடைந்துள்ளது அணிக்கு கவலை தரும் விஷயம். இவர் தவிர புல்டான், ல்லெஸ்பி ஆகியோரும்காயமடைந்துள்ளனர்.

இரு அணிகளும் இதுவரை மோதிய போட்டிகளில் சம அளவிலான வெற்றிகளைப் பெற்று சம பலத்துடன் உள்ளன. உலகக் கோப்பைப்போட்டிகளிலும் இதுவே நிலைமை. எனவே இன்றைய போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வீரர்கள்:

இங்கிலாந்து - மைக்கேல் வாகன், ஆண்ட்ரூ பிளின்டாப், பால் காலிங்வுட், ஆண்ட்ரூ ஸ்டிராஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன், கெவின் பீட்டர்சன், இயான்பெல், ஜேமி டெல்ரிம்பிள், லியாம் பிளங்கட், சாஜித் மஹமூத், எட்மன்ட் ஜோய்ஸ், ஜோனாதன் லூயிஸ், பால் நிக்ஸன், மான்டி பனீசர், ரவீந்தர்போபாரா.

நியூசிலாந்து - ஸ்டீபன் பிளமிங், டேணியல் வெட்டோரி, கிரேக் மெக்மில்லன், ஸ்காட் ஸ்டைரிஸ், பிரண்டன் மெக்கல்லம், லூ வின்சன்ட், ஜேக்கப்ஓரம், டேரைல் டப்பி, ஷேன் பாண்ட், ஜேம்ஸ் பிராங்கிளின், பீட்டர் புல்டன், ரோஸ் டெய்லர், ஜீத்தன் படேல், மார்க் கில்லெஸ்பி, மைக்கேல்மேசன்.

Story first published: Wednesday, December 7, 2011, 17:44 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+