Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியோட பழைய ஹேர்ஸ்டைல்.. பார்த்தாலே பிடிக்காது.. இப்படி சொல்லிட்டாரே சாக்ஷி!

ராஞ்சி : தோனியின் ஆரம்பக்கால ஹேர்ஸ்டைல் தனக்கு பிடிக்காது என்றும், அவரை அப்போது பார்த்திருந்தால் திரும்பிக்கூட பார்த்திருக்க மாட்டேன் என்றும் சாக்ஷி தோனி தெரிவித்துள்ளார்.

ஆரம்பகாலங்களில் நீண்ட ஹேர்ஸ்டைலுடன் தோனி இருப்பார். அவருடைய விளையாட்டுடன் சேர்த்து, இந்த ஹேர்ஸ்டைலும் அவருக்கு புகழை ஏற்படுத்திக் கொடுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ்க்காக இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் ஈடுபட்ட தோனியின் மனைவி சாக்ஷி தோனி, தங்களின் முதல் சந்திப்பில் தோனி இயல்பாக, சாதாரண மனிதராக காட்சியளித்தது தன்னை கவர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சாக்ஷிக்கு பிடிக்காத ஹேர்ஸ்டைல்

சாக்ஷிக்கு பிடிக்காத ஹேர்ஸ்டைல்

தோனி கிரிக்கெட் உலகத்திற்குள் நுழைந்த ஆரம்ப காலங்களில், அவரது ஷாட்களை போலவே அவரது ஹேர்ஸ்டைலும் வித்தியாசமாக இருந்தது. அவர் நீண்ட தலைமுடியுடன் காட்சியளித்தது சிலரை கவர்ந்தாலும் சிலருக்கு பிடிக்காமலும் இருந்தது. இதில் சாக்ஷியும் ஒருவர். தோனியின் ஆரம்பகால நீண்ட தலைமுடி இவருக்கும் பிடிக்காதாம்.

மனம்திறந்த சாக்ஷி தோனி

மனம்திறந்த சாக்ஷி தோனி

நீண்ட தலைமுடியுடன் காணப்பட்ட தோனியின் ஆரம்பகால ஹேர்ஸ்டைலுடன் தான் அவரை பார்த்திருந்தால், திரும்பிக்கூட பார்த்திருக்க மாட்டேன் என்று சாக்ஷி தோனி தெரிவித்துள்ளார். சிஎஸ்கேவின் அதிகாரப்பூர்வ தளத்திற்காக இன்ஸ்டாகிராம் லைவ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ரூபா ரமணியின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய சாக்ஷி தோனி, தோனியின் நீண்ட ஹேர்ஸ்டைலுடன் அவரை பார்க்காதது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

#WhistlePodu @ruphas

A post shared by Chennai Super Kings (@chennaiipl) on

தோனிக்கு இல்லை

நீண்ட தலைமுடி பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரகாமிற்கு பொருந்தும், அனைவருக்கும் பொருந்தாது என்று தெரிவித்த சாக்ஷி, தோனி இதுவரை வைத்ததிலேயே ஆரஞ்சு வண்ணத்துடன் நீண்ட தலைமுடியை வைத்திருந்ததுதான் மிகவும் மோசமான ஹேர்ஸ்டைல் என்றும் கூறியுள்ளார். தங்களது முதல் சந்திப்பின்போது சிறிதாக கட் செய்யப்பட்ட ஹேர்ஸ்டைலுடன் தோனியை பார்த்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாக்ஷியை கவர்ந்த தோற்றம்

சாக்ஷியை கவர்ந்த தோற்றம்

தாஜ் ஹோட்டலில் தன்னுடைய இன்டர்ன்ஷிப்பின் கடைசி நாளின்போதுதான் தான் தோனியை சந்தித்ததாகவும், சினிமாக்களில் வருவதுபோல அந்த காட்சி இருந்ததாகவும் சாக்ஷி மேலும் குறிப்பிட்டார். மிகவும் இயல்பாக, சாதாரண மனிதராக பழகிய தோனியை கண்டவுடன் தனக்கு பிடித்ததாகவும் அவர் கூறினார். அப்போது தனக்கு கிரிக்கெட் குறித்து அதிகமாக தெரியாது என்றும், தன்னுடைய அம்மா தான் தோனியின் ரசிகையாக இருந்ததாகவும் சாக்ஷி தெரிவித்தார்.

Story first published: Monday, June 1, 2020, 12:21 [IST]
Other articles published on Jun 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+