For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

WWEக்கும் ஆப்பு வைத்த கொரோனா.. அதிகாரிகள் பிடிவாதம்.. ரெஸ்ஸில்மேனியா தொடருக்கு “நோ”!

நியூயார்க் : கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள விளையாட்டுப் போட்டிகளை ஸ்தம்பித்து நிற்க வைத்துள்ளது.

இது உலகம் இதுவரை சந்தித்து இருக்காத ஒரு நிலைமை. இதற்கு WWE-யும் விதிவிலக்கல்ல.

Wrestlemania 36 may get cancelled due to Coronavirus threat

உலகம் முழுவதும் கோடிகணக்கான ரசிகர்களை வைத்துள்ள WWEஇன் மிகப் பெரும் தொடரான ரெஸ்ஸில்மேனியா 36 ஏப்ரல் 5 அன்று நடைபெற இருந்தது.

ஆனால், இந்த தொடர் கொரோனா வைரஸ் காரணமாக நடக்காது என கூறப்படுகிறது. அமெரிக்காவில் சில நாட்களில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2000த்தை தாண்டி உள்ளது.

அதனால், நாடு முழுவதும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. விளையாட்டுப் போட்டிகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் எப்படியாவது ரெஸ்ஸில்மேனியா தொடரை நடத்திவிட எண்ணிய WWEக்கு வேட்டு வைத்துள்ளது அமெரிக்க அரசு.

மக்களின் ப[பாதுகாப்பு கருதி அந்த தொடரை நடத்தக் கூடாது என அறிவுறுத்தி உள்ளது. அதனால், WWE சிக்கலில் உள்ளது.

WWE வெளியிட்டுள்ள அறிக்கையில், தாங்கள் ரெஸ்ஸில்மேனியா தொடரை நடத்துவதில் உறுதியாக இருந்ததாகவும், ஆனால், உள்ளூர் அரங்கங்கள், பொது அமைப்புகள் மற்றும் அரசு அதிகாரிகள் தொடரை ரத்து செய்ய கூறி உள்ளனர். அதனால், மாற்று திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம் என கூறி உள்ளது.

இந்த முறை அந்த தொடரில் பிராக்லெஸ்னர் - ட்ரூ மேக்இன்டையர் போட்டி மற்றும் கோல்ட்பெர்க் - ரோமன் ரெய்ன்ஸ் போட்டிக்கும் கடும் எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர் ரத்து செய்யப்படும் பட்சத்தில் WWE டிவியில் மட்டும் ஒளிபரப்பாகும் வகையில் தொடரை நடத்தவும் வாய்ப்பு உள்ளது.

Story first published: Monday, March 16, 2020, 22:08 [IST]
Other articles published on Mar 16, 2020
English summary
Wrestlemania 36 may get cancelled due to Coronavirus threat
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+