Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாஜகவில் இணைந்தால் என் மீதான தடை நீங்கிவிடும்! மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா கருத்து

மும்பை : முன்னாள் பாஜக எம் பி யும் அப்போதைய மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராகவும் இருந்த பிரிஜி சிங் பூஷனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஊக்க மருந்து சோதனைக்கு ஆஜராகவில்லை எனக் கூறி நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

வினேஷ் போகட், சாக்ஷி மாலிக்குடன் பஜ்ரங் பூனியா ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தொடர்பு உடையவராக கூறப்படும் பிரிஜ் சிங் பூஷன் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

wrestling bajrang punia vinesh phogat

இந்த நிலையில் வினேஷ் போகட் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் நிலையில் உடல் எடை கூறியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனை அடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆகிவிட்டார். இந்த சூழலில் பஜ்ரங் புனியா, ஊக்க மருந்து சோதனைக்கு ஆஜராகவில்லை எனக்கூறி தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் நான்காண்டுகள் வரை பஜ்ரங் பூண்யாவுக்கு தடை விதித்திருந்தது.

தற்போது இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பஜ்ரங் பூனியா, இது அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக செய்யப்பட்டு இருக்கிறது. நான் மல்யுத்த வீராங்கனைகள் பக்கம் இருந்தேன். அதற்காக என் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். நீங்கள் எந்த இடத்தில் எந்த நேரத்தில் என்னை அழைத்து ஊக்க மருந்து சோதனையில் நடத்தினாலும்,என்னுடைய இரத்த சிறுநீர் மாதிரிகளை வழங்க நான் தயார்.

இந்த நடவடிக்கை எனக்கு எந்த ஒரு அதிர்ச்சியும் கொடுக்கவில்லை. ஏற்கனவே எனக்கு இதுபோல் சஸ்பெண்ட் செய்து இருந்தார்கள். நான் என்னுடைய மாதிரிகளை வழங்கிய பிறகு அதனை நீக்கினார்கள்.தற்போது மற்றொரு தடை என் மீது விதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும் போது என்னிடம் வந்து ரத்த மாதிரிகளை கேட்டனர்.

அது மட்டும் இல்லாமல் காலாவதியான உபகரணங்களை வைத்து எனக்கு சோதனை செய்ய முயன்றார்கள். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். நான் மட்டும் தற்போது இந்த போராட்டங்களை எல்லாம் விட்டுவிட்டு பாஜகவில் இணைந்தேன் என்றால் என் மீதான அனைத்து தடையும் உடனடியாக நீக்கப்படும் என்று பஜ்ரங் பூனியா கூறியுள்ளார்.

Story first published: Thursday, November 28, 2024, 20:47 [IST]
Other articles published on Nov 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+