
ரெபிசாஜ் சுற்றில் தகுதி...
நடப்பு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் காலிறுதியில் ரஷ்யா வீராங்கனை விளிரியா கொலாகோவா உடன் நடந்த போட்டியில் தோல்வியடைந்ததால் ரெபிசாஜ் சுற்றில் விளையாடிய சாக்ஷி, அச்சுற்றில் மங்கோலிய வீராங்கனை ஒர்ஹான் புர்வித்ஜ்ஜை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றார்.

ஆக்ரோஷத்துடன் மீண்டெழுந்தார்...
பின்னர் நேற்று கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதலில் 0-5 என பின் தங்கியிருந்த சாக்ஷி கடைசி நிமிடத்தில் 8-5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற சாக்ஷி வெண்கலப் பதக்கம் வென்றார்.

4-வது இந்தியர்
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற 3-வது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்னர்
கே.டி. ஜாதவ், சுஷில் குமார் மற்றும் யோகேஷ்வர் தத் ஆகியோர் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்றவர்கள் ஆவர்.

இதுவரை 5-வது பதக்கம்
கே.டி. ஜாதவ் 1952-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார்.
சுஷில்குமார் 2008 பெய்ஜிங்கில் வெண்கலமும் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளியும் வென்றார்.
2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் யோகேஷ்வர் தத் வெண்கலப் பதக்கம் வென்றார். தற்போது சாக்ஷி மல்யுத்தத்தில் 5-வது பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.

இதுவரை சாக்ஷி
2002-ல் இருந்து மல்யுத்தப் போட்டிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சாக்ஷி கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். தோஹாவில் 2014-ல் நடந்த ஆசிய போட்டிகளில் வெண்கலம் வென்றவர். இப்போது ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











