Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளிர் மல்யுத்தம்: காயத்தால் வெளியேறினார் இந்தியா வீராங்கனை விக்னேஷ் போகத்

ரியோ : ரியோ ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தப் போட்டியின் 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் விக்னேஷ் போகட் காயத்தால் வெளியேறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரியோ ஒலிம்பிக் மகளிர் ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியின் 48 கிலோ எடைப்பிரிவில் சிறப்பாக விளையாடி காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் விக்னேஷ் போகத். இதன்மூலம் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

wrestling women :Vinesh Phogat injured during the match loses

காலிறுதியில் சீனாவின் சுன் யானை எதிர்கொண்ட அவர் அருமையாக விளையாடி வந்த நிலையில் திடீரென கால் மூட்டில் காயம் ஏற்பட்டது.

வலியால் துடித்த அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது. நெடுநேரம் முதலுதவி சிகிச்சை பெற்ற நிலையிலும் தொடர்ந்து விளையாடுவதற்கு உடல் ஒத்துழைக்காத காரணத்தால் போட்டியிலிருந்து விலக வேண்டிய சூழல் உண்டானது.

wrestling women :Vinesh Phogat injured during the match loses

இதனால், சீன வீரங்கானை சுன் யான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மல்யுத்தத்தில் நன்கு விளையாடி வந்த விக்னேஷ் போகத் துரதிஷ்டவசமாக காயத்தால் வெளியிறியுள்ளது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Story first published: Thursday, August 18, 2016, 9:39 [IST]
Other articles published on Aug 18, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+