Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரபல ரெஸ்லிங் வீரர் கைது.. அதிர வைக்கும் பாலியல் புகார்.. மீண்டும் WWEஇல் சேர வாய்ப்பே இல்லை!

சான் ஆண்டனியோ : பிரபல ரெஸ்லிங் வீரர் அல்பெர்டோ டெல் ரியோ பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

WWE Alberto Del Rio arrested| பிரபல wrestling வீரர் பாலியல் குற்றச்சாட்டில் கைது

அவர் மீது ஒரு பெண் கடந்த மே மாதம் 4ஆம் தேதி காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பெயரில் அவரை கைது செய்ததாகவும், பின்னர் அவர் 50,000 டாலர் பான்ட் அளித்து ஜாமீனில் வெளியே வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சாம்பியன் பட்டம் வென்றவர்

சாம்பியன் பட்டம் வென்றவர்

WWE ரெஸ்லிங் நிகழ்ச்சிகள் மூலம் உலக அளவில் பிரபலம் அடைந்தவர் அல்பெர்டோ டெல் ரியோ. ஜான் சீனா, எட்ஜ் போன்ற முன்னணி ரெஸ்லிங் வீரர்கள் உச்சத்தில் இருந்த போது அவர்களுடன் மோதி WWE சாம்பியன் பட்டம் வென்றவர்.

ஒப்பந்தம் ரத்து

ஒப்பந்தம் ரத்து

தொடர்ந்து ரெஸ்லிங் போட்டிகளில் ஆடி வந்த அவர் கடந்த 2016ஆம் ஆண்டு சக ரெஸ்லிங் வீரர்களுடன் சண்டையிட்டதாக தகவல்கள் வெளியாகின. அவர் தொடர்ந்து ஆக்ரோஷமாக நடந்து கொண்டதை அடுத்து WWE அவரை வெளியேற்றியது. அவரது ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது.

வீராங்கனையுடன் காதல்

வீராங்கனையுடன் காதல்

அவரது வெளியேற்றத்துக்கு WWE ரெஸ்லிங் வீராங்கனை பெய்ஜ்-உம் ஒரு காரணம். அல்பெர்டோ டெல் ரியோவும், பெய்ஜ்-உம் காதலித்தனர். இருவரும் வெளியே சுற்றித் திரிந்தனர். அப்போது அவர்கள் இடையே பல சமயம் வாக்குவாதங்கள் வெடித்தன.

WWE விரும்பவில்லை

WWE விரும்பவில்லை

அந்த சம்பவங்கள் செய்தியாக வெளியானதை WWE நிறுவனம் விரும்பவில்லை என கூறப்படுகிறது. சக வீரர்கள், காதலி என அனைவருடனும் சண்டை போட்ட டெல் ரியோ, WWE-ஐ விட்டு விலகிய பின் சிறு சிறு ரெஸ்லிங் நிறுவனங்களில் இணைந்து போட்டிகளில் ஆடி வந்தார்

ஆஸ்திரியா சம்பவம்

ஆஸ்திரியா சம்பவம்

ஒருமுறை ஆஸ்திரியா நாட்டிற்கு சென்ற போது அங்கே தன் சகோதரர் மற்றும் ஒருவரை கடுமையாக காயம் அடையும் அளவுக்கு தாக்கி இருக்கிறார். அதற்காக அப்போது ஆஸ்திரியா காவல் துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம்

தாக்குதல் சம்பவம்

டெக்சாஸ் மாகாணம், சான் ஆண்டானியோ நகரை சேர்ந்த அல்பெர்டோ டெல் ரியோ, அதே நகரை சேர்ந்த ஒரு பெண்ணை முகத்தில் பல முறை அறைந்துள்ளார். அதன் பின் ஒரு உடையை கொடுத்து அந்த பெண்ணை அணிந்து கொண்டு நடனம் ஆடுமாறு கூறி உள்ளார்.

கடும் மிரட்டல்

கடும் மிரட்டல்

அதற்கு அந்த பெண் மறுத்து அழுத நிலையில், அவரை அழாமல் இருக்க வேண்டும் என மிரட்டி உள்ளார். மேலும், அந்த பெண்ணின் மகனை காரில் அழைத்துப் போய் நடுவழியில் இறக்கி விட்டு விடுவேன் எனவும் மிரட்டி உள்ளார்.

காயம் அடைந்தார்

காயம் அடைந்தார்

மேலும், அந்த பெண்ணை தாக்கியதில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதை அந்த பெண் புகைப்படம் எடுத்து ஆதாரத்துடன் காவலர்களிடம் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் அவரை கைது செய்தனர். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார் டெல் ரியோ.

இனி WWE வாய்ப்பே இல்லை

இனி WWE வாய்ப்பே இல்லை

அவர் 2020 மத்தியில் WWE-க்கு திரும்ப பேசி வருவதாக ஒரு முறை கூறி இருந்தார். தற்போது அவர் மீது கடும் புகார் பாய்ந்துள்ள நிலையில், இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் சில ஆண்டுகள் சிறைத்தண்டனை கூட கிடைக்கலாம். அதனால், அவர் இனி WWE பக்கம் தலை வைத்து கூட படுக்க முடியாது என்கிறார்கள்.

Story first published: Monday, May 11, 2020, 18:07 [IST]
Other articles published on May 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+