For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

WWE Backlash 2024 - WWE சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த Cody Rhodes.. Randy ortan ஜோடி தோல்வி

2024-2025ஆம் ஆண்டிற்கான முதல் பெரிய WWE தொடரான பேக்லேஷ் (BACKLASH) தொடர் பிரான்ஸ் நாட்டின் லயான் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. உலகம் முழுவதும் பல்வேறு ரசிகர்களை கொண்ட WWE பொழுதுப் போக்கு விளையாட்டு தொடரான இது, நமது ஊர் சீரியல் போல், மல்யுத்தத்தை மையமாக வைத்து நடத்தப்படும் தொடராகும்.

இதில் மல்யுத்தத்தை மிகவும் கமர்சியலாகவும், சீட்டு நுனியில் ரசிகர்களை அழைத்து கொண்டு வரப்படும் சண்டை காட்சிகளும் அமையும். இந்த தொடரின் முதல் போட்டியில் நேற்று Randy ortan மற்றும் Kevin owens ஜோடி இணைந்து Blood line குழுவை சேர்ந்த solo sikoa மற்றும் Tama tonga வை எதிர்கொண்டனர்.

WWE Backlash 2024 results full list - cody rhodes defended his title against AJ Styles

இந்தப் போட்டி தொடங்கிய உடன், இரு குழுவும் தெருவில் மோதிக் கொண்டது போல் கையில் கிடைத்த பொருட்களை வைத்து எல்லாம் அடித்து கொண்டனர். ஒரு கட்டத்தில் Tama tonga வின் சகோதரர் உள்ளே நுழைந்து Randy ortan குழுவை அடித்ததால், அவர்கள் தோல்வியுற்றனர்.

இதே போன்று WWE Heavy Weight championship Damian priest ,Jey uso உடன் மோதலில் ஈடுபட்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டேமியன் பிரீஸ்ட் தன்னுடைய பட்டத்தை தக்க வைத்து கொண்டார். இறுதியில் நடைபெற்ற WWE Championship க்கான போட்டியில் நடப்பு சாம்பியன் Cody Rhodes மற்றும் முன்னாள் சாம்பியன் AJ STyles உடன் பலப்பரீட்சையில் ஈடுபட்டனர்.

இதில், இருவருமே தங்களுடைய Signature மூவ்களை வெளிக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். ரசிகர்களுக்கு கொடுத்த காசுக்கு மேல் , இருவரும் தங்களது சண்டைகள் மூலம் பொழுதுப் போக்கை அளிக்க, இறுதியில் Cody rhodes தங்களது சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொண்டார்.

இதனிடையே, ஆடவர்களை போல் மகளிருக்கான போட்டிகளும் நடைபெற்றது. WWE Womens tag team championship க்கான போட்டியில் Bianca belair மற்றும் Jade cargil குழு, The Kabuki Warriors ஐ வீழ்த்தினர். WWE Women championship போட்டியில், Bayley வெற்றி பெற்று பட்டத்தை தக்க வைத்து கொண்டார்.

Story first published: Sunday, May 5, 2024, 14:25 [IST]
Other articles published on May 5, 2024
English summary
WWE Backlash 2024 results full list - cody rhodes defended his title against AJ Styles WWE சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த Cody Rhodes.. Randy ortan ஜோடி தோல்வி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+