Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WWE பிரஸ் மீட்டில் John cena சம்பவம்.. சக வீரரை மேடையில் தூக்கி எறிந்ததால் பரபரப்பு.. என்ன ஆச்சு?

செயிண்ட் லூயீஸ்: WWE மல்யுத்த போட்டிக்குப் பின்பு செய்தியாளர் சந்திப்பில் பிரபல வீரர் ஜான் சினா சக வீரர் ஒருவரை தூக்கி டேபிளில் எறிந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.WWE எனப்படுவது பொழுதுபோக்கு மல்யுத்த தொடராகும். அதாவது தொலைக்காட்சி சீரியல் போல் கதை எழுதி நடத்தப்படும் பொழுதுபோக்கு அம்ச விளையாட்டு தொடர்.

ஒவ்வொரு போட்டியிலும் எதிர்பார்க்க முடியாத ட்ராமா, கணிக்க முடியாத முடிவுகள், பரபரப்பு சம்பவங்கள் நிகழ்வதால் இந்த போட்டிகளை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கண்டு களிக்கின்றனர். அந்த வகையில் இந்த WWE போட்டியில் மிகப்பெரிய ஒரு தொடர் என்றால் அது Wrestlemania தான்.

WWE Johncena

இந்த Wrestlemania-வில் பங்கேற்ற பிரபல மல்யுத்த வீரர் ஜான் சீனா 17 வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தார். இந்த நிலையில் ரஸில்மேனியா தொடருக்குப் பிறகு நடைபெற்ற wwe Backclash என்ற தொடர் நடைபெற்றது. இதில் ஜான் சீனா தன்னுடைய டபிள்யூ டபிள்யூ இ சாம்பியன் பட்டத்திற்காக மீண்டும் மோதினார்.

ஆனால் இம்முறை அவருடன் சேர்ந்து அறிமுகமாகி பிரபலமான Randy ortan- ஐ அவர் சந்தித்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜான் சீனா வெற்றி பெற்றார். ஜான் சீனா தவறான ஒரு செயலை செய்துதான் வெற்றி பெற்றதால் ரசிகர்கள் ஜான் சீனாவை நோக்கி உனக்கு ரெஸ்லிங் செய்ய தெரியாது என்று கத்தினர்.
இந்த நிலையில் இந்த தொடர் முடிவடைந்து உடன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது உள்ளே நுழைந்த ஜான் சீனா செய்தியாளருடன் பேச வேண்டும் என்று கூறி இருக்கையில் அமர்ந்து பேச தொடங்கினார். அப்போது சக வீரரான R- Truth ஜான் சீனாவிடம் வந்து சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் ரசிகர்கள் உனக்கு ரெஸ்லிங் செய்ய தெரியாது என்று கூறினாலும் கவலைப்படாதே என்று ஒரு வார்த்தையை விட்டார்.

இதனால் கோபமடைந்த ஜான் சீனா திடீரென்று அவரை தூக்கி விளாசி அங்கு இருந்த டேபிளில் எறிந்தார். இதில் R Truth காயமடைந்து டேபிள் சுக்கு நூறாக உடைந்தது. இது அங்கிருந்த பத்திரிகையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ஆனால் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு wwe எழுதும் ஸ்கிரிப்டில் ஒரு பகுதி தான் என்று கூறப்படுகிறது. பொதுவாக WWE பத்திரிகையாளர் சந்திப்பில் நியாயமாக தான் நடத்துவார்கள்.

ஆனால் தற்போது ஒரு படி மேல் போய் டிராமாவின் விறுவிறுப்பை அதிகரிப்பதற்காக பத்திரிக்கையாளர் சந்திப்பையும் கதையின் ஒரு அம்சமாக மாற்றி ஜான் சீனா சகவீரரை தாக்கியது போல் கதையை அமைத்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உடைய ஜான் சீனா திடீரென்று வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று விளையாடுவது பல ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 20 ஆண்டுகளுக்கு மேல் டபிள்யூ டபிள்யூ இ போட்டிகளில் விளையாடி வரும் ஜான் சீனா நடப்பாண்டு முதல் ஓய்வு பெறப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த தொடரில் நடைபெற்ற US சாம்பியன்ஷிப் பெல்ட்க்கான போட்டியில் Jacob Fetu வெற்றி பெற்றார்.

Story first published: Sunday, May 11, 2025, 22:44 [IST]
Other articles published on May 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+