WWE Crown Jewel 2025.. அண்டர்டேக்கர், ரேண்டி ஆர்டனுக்கு மரியாதை செலுத்திய ஜான் சினா! 100வது வெற்றி
பெர்த்: WWE தொடரில் நடைபெறும் கிரவுன் ஜுவல் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் நடைபெற்றது. இந்த தொடரில் பல முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். தனது கடைசி வெளிநாட்டு தொடரில் பங்கு பெற்ற ஜான் சினா மற்றொரு நட்சத்திர வீரரான ஏஜே ஸ்டைல்ஸ் உடன் மோதிய போட்டி ரசிகர்களின் இதயத்தை வென்றது.
ஜான்சினா வரும் டிசம்பர் மாதத்துடன் WWE மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருக்கிறார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாலில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜான் சினா பலப்பரீட்சை நடத்தினார். தன்னுடைய கடைசி ஆண்டு என்பதால் தன்னுடன் விளையாடிய பல மல்யுத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்களுடைய சண்டை ஸ்டைலை தனது போட்டியில் அவர் செய்து காட்டினார்.

பொதுவாக ஒவ்வொரு மல்யுத்த வீரர்களுக்கும் ஒவ்வொரு சண்டை ஸ்டைல்(Finishing move) இருக்கும். அதனை பெரும்பாலும் மற்ற மல்யுத்த வீரர்கள் பின்பற்ற மாட்டார்கள். ஆனால் ஜான்சினா மற்ற மல்யுத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இதனை தனது கடைசி ஆண்டில் செய்தார்.
அவர் ஒவ்வொரு வீரர்களின் ஃபினிஷர் மூவை செய்யும் போது ஒட்டுமொத்த அரங்கமே அதிர்ந்தது. முதலில் ரேண்டி ஆர்டனின் ஆர்கேஓ பினிஷர் மூவை ஜான்சினா செய்து அசத்தினார். இதனை தொடர்ந்து கிரிஸ் ஜெரிக்கோ, மிஸ், ரஸிவ் போன்ற வீரர்களின் மூவ்வை செய்து அசத்தினார். ஒரு கட்டத்தில் கொரோனா காலத்தில் உயிரிழந்த பிரபல மல்யுத்த வீரர் பிரேட் வொயிட் ஃபினிஷர் மூவை ஜான் சினா செய்த போது ஒட்டுமொத்த அரங்கமே நெகிழ்ச்சி அடைந்து பிரேட் வொயிட்டுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தங்களுடைய செல்போன் பிளாஷ் லைட் ஆன் செய்தனர்.
இதை பார்த்து ஜான் சினாவே ஒரு கணம் கண்ணீர் சிந்தினார். இதனைத் தொடர்ந்து பிரபல மல்யுத்த வீரர் அண்டர்டேக்கர் இன் பினிஷிங் மூவை ஜான்சினா செய்து அசத்தினார். முதலில் சோக் ஸ்லாம் எல்லாம் போட்ட ஜான் சினா பின்னர் அண்டர்டேக்கர் பிரபல மூவ்வான Tomb stone pile diver மூவ் செய்து ஏஜே ஸ்டைல்சை வீழ்த்தினார்.
இதனை அடுத்து ஏஜே ஸ்டைல்சை கட்டி அணைத்து இருவரும் பரஸ்பரமாக மரியாதை செலுத்தி கொண்டனர். இதை தொடர்ந்து நடைபெற்ற கிரவுண் ஜுவல் முக்கிய ஆட்டத்தில் கோடி ரூட்ஸ் பட்டத்தை வென்றார். இதேபோன்று மகளிர் பிரிவில் டிபானியை வீழ்த்தி ஸ்டெபினி வாங்குவர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.


Click it and Unblock the Notifications