Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதான் நீங்க லைவ் மேட்ச் காட்டும் லட்சணமா? உறைந்து போன WWE ரசிகர்கள்.. மைக் டைசன் போட்டியால் சிக்கல்

டெக்சாஸ்: குத்துச்சண்டை ஜாம்பவான் ஆன மைக் டைசன் மற்றும் இளம் குத்துச்சண்டை வீரர் ஜேக் பால் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. அதன் ஒளிபரப்பில் பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்தன.

நெட்பிளிக்ஸ்-இல் ஏற்பட்ட சர்வர் பிரச்சனை காரணமாக இந்த போட்டியை பலரால் நேரலையில் தெளிவாக பார்க்க முடியவில்லை. பலருக்கு ஒளிபரப்பு விட்டு விட்டு காட்டப்பட்டது. வேறு சிலருக்கோ வீடியோவின் தரம் மிகவும் மோசமாக இருந்தது. பலரால் போட்டியை முழுமையாக பார்க்க முடியவில்லை.

wwe netflix mike tyson

இதை அடுத்து நெட்ப்ளிக்ஸ் தளத்திற்கு பணம் கட்டிய சந்தாதாரர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். குறிப்பாக மைக் டைசன் - ஜேக் பால் போட்டியை பார்க்க மட்டுமே நெட்பிளிக்ஸ் தளத்திற்கு சந்தா செலுத்தி புதிதாக சேர்ந்தவர்கள் கடுமையாக அதிருப்தி அடைந்து உள்ளனர்.

இதுவே நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரிய அளவில் ஒளிபரப்பிய முதல் நேரலை விளையாட்டுப் போட்டி ஆகும். அதன் ஒளிபரப்பு தரம் படுமோசமாக இருந்ததை அடுத்து WWE ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஏனெனில், அடுத்த ஆண்டு முதல் டபிள்யூ.டபிள்யூ.இ ரா (WWE Raw) நிகழ்ச்சி நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரலையில் ஒளிபரப்பாக உள்ளது.

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் டபிள்யூ.டபிள்யூ.இ ரா நிகழ்ச்சி 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நேற்று தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. இதுவரை தொலைக்காட்சியில் டபிள்யூ.டபிள்யூ.இ ரா நிகழ்ச்சியை பார்த்து வந்தவர்கள் இனி நெட்பிளிக்ஸ் தளத்தில் மட்டுமே அதை பார்க்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

wwe netflix mike tyson


அப்படி இருக்கும் போது நெட்பிளிக்ஸ் ஒளிபரப்பிய பிரம்மாண்ட நேரலை விளையாட்டு நிகழ்ச்சியில் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு இருப்பது டபிள்யூ.டபிள்யூ.இ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ரா நிகழ்ச்சியை நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்புவதற்காக சுமார் 5 பில்லியன் டாலர்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் டபிள்யு.டபிள்யு.இ நிறுவனத்துக்கு அளிக்க உள்ளது.

இத்தனை பெரிய ஒப்பந்தம் இருக்கும் நிலையில் ஒளிபரப்பு சரியாக இல்லை என்றால் ரெஸ்லிங் ரசிகர்கள் தளத்தை புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது. இதில் மிகப்பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Saturday, November 16, 2024, 16:22 [IST]
Other articles published on Nov 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+