செம மேட்ச் இருக்கு.. இந்தியா வந்த WWE வீரர் ஜான் சீனா.. எகிறும் எதிர்பார்ப்பு!
ஹைதராபாத் : பிரபல தொழில்முறை மல்யுத்த நிறுவனமான WWE சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் நிகழ்ச்சியை நடத்த உள்ளது.
அதில் பிரபல மல்யுத்த வீரர் ஜான் சீனாவும் கலந்து கொள்கிறார். அவருடன் இன்னும் பல முன்னணி WWE நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.

ஹைதராபாத் நகரில் உள்ள கோச்சிபௌலி அரங்கில் தான் இந்த முறை WWE தான் போட்டிகளை நடத்த உள்ளது. இதுவரை டெல்லி போன்ற வட இந்தியப் பகுதிகளில் மட்டுமே தான் போட்டிகளை நடத்தி உள்ள WWE முதன்முறையாக தென் இந்தியாவில் தான் போட்டிகளை நடத்த உள்ளது.
செப்டம்பர் 8 அன்று மாலை 7.30 மணிக்கு WWE Superstar Spectacle இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொலைக்காட்சியில் நேரலையில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. அதே சமயம், SonyLIV இல் நேரலையில் காணலாம்.
நேரில் இந்தப் போட்டியைக் காண 5,000 டிக்கெட்கள் ஆன்லைனில் விற்கப்பட்டது. எனவே, அந்த அரங்கம் முழுவதும் ரசிகர்களின் ஆரவாரத்துக்கு நடுவே ஜான் சீனா போன்ற முன்னணி வீரர்கள் மோத உள்ளனர்.
இந்தப் போட்டியில் பங்கேற்க இந்தியா வந்த WWE வீரர்கள் விவரம் :
ஜான் சீனா
செத் ரோலின்ஸ் (WWE ஹெவிவெயிட் சாம்பியன்)
ரியா ரிப்லி (WWE மகளிர் உலக சாம்பியன்)
சாமி ஸேய்ன் மற்றும் கெவின் ஓவன்ஸ் (WWE டேக்டீம் சாம்பியன்)
குந்தர் (WWE இன்டர்காண்டினென்டல் சாம்பியன்)
ஜிந்தர் மஹால்
வீர்
சங்கா
ட்ரூ மெக்கின்டயர்
நடால்யா
மேட் ரிடில்
லுட்விக் கைசர்
இவர்களில் ஜான் சீனா மற்றும் செத் ரோலின்ஸ் இணைந்து டேக் டீம் போட்டியில் இம்பீரியம் என்ற டேக் டீமை சேர்ந்த வின்சி மற்றும் கைசர் உடன் மோதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்திய வம்சாவளி வீரர்களான ஜிந்தர் மஹால், வீர, சங்கா ஆகியோரும் போட்டிகளில் மோத உள்ளனர்.
பிரபல வீராங்கனை பெக்கி லின்ச்சும் இந்த நிகழ்ச்சிக்காக இந்தியா வர இருந்தார். ஆனால், பாஸ்போர்ட் கிழிந்து இருந்ததால் விமான நிலையம் வரை வந்து திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதில் வேறு வீராங்கனையை WWE நிர்வாகம் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications