For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னை மன்னித்து விடு! 11 வயது சிறுவனிடம் மன்னிப்பு கேட்ட WWE மல்யுத்த வீரர் John cena

லியோன்: பிரபல WWE வீரர் ஜான் சீனா 11 வயது சிறுவனிடம் நேரலையில் மன்னிப்பு கேட்டது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கின்றது. wwe சூப்பர் ஸ்டார் ஆன ஜான் சீனா வரும் டிசம்பர் மாதத்துடன் மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சுமார் ஒரு ஆண்டாக நடைபெறும் தனது ஓய்வு சுற்றுப்பயணத்தில் இன்று இரவு பிரான்ஸ் நாட்டில் "கிளாஸ் இன் தி பாரிஸ்" என்ற விளையாட்டு தொடரில் பிரபல மல்யுத்த வீரர் லோகன் பாலை எதிர்கொள்கின்றார். இந்த ஆண்டு ஜான் சீனா முதல் முறையாக வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று டபிள்யூ டபிள்யூ இ வில் வலம் வந்தார்.

John cena apologizes to the fan kid

இதற்கு கலவையான விமர்சனங்கள் வந்தது. ஜான் சீனாவை ஹீரோவாகவே பார்க்க விரும்புகிறோம் என்று சிலரும், ஒரு சிலர் ஜான் சீனாவுக்கு இந்த புதிய கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று வந்த ஜான் சீனா மீண்டும் ஹீரோவாக மாறினார்.

இந்த நிலையில் வில்லன் கதாபாத்திரத்தில் இருந்தபோது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் பெல்ஜியம் நடந்த போட்டி ஒன்றில் 11 வயது சிறுவன் ஒருவரை ஜான் சீனா விமர்சித்து திட்டுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரல் ஆனது. இது நடிப்பு என்றாலும், அது அந்த சிறுவனின் மனதை பெரிய அளவு பாதிக்க வைத்திருக்கிறது.

இந்த தருணத்தில் ஜான் சீனா தற்போது மீண்டும் ஹீரோ கதாபாத்திரத்தை ஏற்றுள்ள நிலையில், நேற்று பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் போட்டி ஒன்று நடந்தது .அப்போது ஜான் சீனா திட்டிய சிறுவன் அந்தப் போட்டியில் பார்வையாளராக பங்கேற்றார். இதனை அறிந்த ஜான் சீனா, நேரலை நடந்து கொண்டிருக்கும் போது ரசிகர்களுக்கு ஒரு அட்வைஸ் கூறினார்.

அதில்," நாம் அனைவரும் தவறு செய்திருப்போம். சில நாட்கள் நமக்கு மோசமாக இருந்திருக்கும். அப்போது, நாம் யார் மனதையாவது காயப்படுத்தி இருப்போம்.அந்த நபரை இரண்டாவது முறையாக நாம் சந்தித்தால், உடனே அவர்களிடம் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும். இதுதான் சரியானது" என்று கூறி திடீரென்று பார்வையாளர் மாடத்தில் இருந்த அந்த சிறுவனை அழைத்து, "சில மாதங்களுக்கு முன் உன்னிடம் நான் தவறாக நடந்து கொண்டேன்."

" என்னை மன்னித்துவிடு. நான் மோசமான காலகட்டத்தில் இருந்தேன். உன்னுடைய அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி" என்று கூறினார். இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அந்த சிறுவன் மகிழ்ச்சி கடலில் திளைத்தார். ஜான் சினாவின் இந்த செயல் ஒட்டுமொத்த டபிள்யூ டபிள்யூ இ ரசிகர்களையும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கின்றது.

Story first published: Sunday, August 31, 2025, 10:54 [IST]
Other articles published on Aug 31, 2025
English summary
WWE- John cena apologizes to the fan kid in smack down live
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+