Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரபல WWE மல்யுத்த வீரர் Hulk Hogan காலமானார்.. 71 வயதில் உயிர் பிரிந்தது

அமெரிக்கா: பிரபல wwe மல்யுத்த வீரரான ஹல்க் ஹோகன் தனது 71 வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார். மல்யுத்த போட்டியின் முடி சூடா மன்னனாக ஒரு காலத்தில் விளங்கிய ஹல்க் ஹோகன் WWE நிறுவனம் இன்று மாபெரும் சாம்பிராஜ்யத்தை படைத்ததற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளார். இவரது இயற்பெயர் அவரது உண்மையான பெயர் டெர்ரி ஜீன் போலியா (Terry Gene Bollea).

அமெரிக்காவில் மட்டும் குறிப்பிட்ட பகுதியில் பிரபலமாக இருந்த மல்யுத்த பொழுதுபோக்கு போட்டியை wwe மூலம் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்ததில் ஹல்க் ஹோகனுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கின்றது.

Hulk Hogan

wwe நிறுவனத்தை தொடங்கிய வின்ஸ் மிக்மேனுடன் சேர்ந்து ஹல்க் ஹோகன் மல்யுத்த போட்டிகளை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றார். இந்த சூழலில் ஹல்க் ஹோகன் தன்னுடைய 71 வது வயதில் ஃப்ளோரிடாவில் உள்ள தனது வீட்டில் மயங்கி கிடந்து இருக்கின்றார்.

இதனை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் அவசர கால உதவிக்கு அழைத்திருக்கிறார்கள். இதனை அடுத்து மருத்துவ உதவி குழுவினர் ஹல்க் ஹோகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதே அவருடைய உயிர் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஹல்க் ஹோகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவருடைய உயிர் பிரிந்ததாக முதல் கட்ட செய்திகள் வெளியாகி உள்ளது. ரெஸ்லிங் உலகத்தின் முதல் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ஹல்க் ஹோகன் 1980 ஆம் ஆண்டுகளில் எல்லாம் ஒரு போட்டியில் பங்கேற்க சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் ஊதியமாக பெற்றிருந்தார்.

ஹல்க் ஹோகன் அண்மையில் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டதற்காக சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அவர் கோமாவில் சென்றுவிட்டதாக பல வதந்திகள் கிளம்பின. எனினும் அவர் நலமுடன் இருந்ததாக அவருடைய மனைவி தெரிவித்த நிலையில், தற்போது ஹல்க் ஹோகன் உயிரிழந்துவிட்டதாக செய்தி வெளியாகியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கின்றது. ஹல்க் ஹோகனின் இந்த திடீர் மறைவுக்கு ஒட்டுமொத்த ரசிகர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Story first published: Thursday, July 24, 2025, 21:44 [IST]
Other articles published on Jul 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+