90 கிட்ஸ் கேட்டுச்சா.. தன்னை விட 25 வயது குறைவான பெண்ணை மணக்கும் 69 வயது WWE வீரர் Hulk Hogan
நியூயார்க் : பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் கோகனுக்கு தற்போது 69 வயது ஆகிறது. WWE எனப்படும் மல்யுத்த பொழுதுபோக்கு தொடர் 90ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் ஒன்றோடு ஒன்றாக பின்னி பிணைந்து இருந்தது.
இதில் ஹல்க் கோகன், அண்டர்டேக்கர், ஷான் மைக்கேல்ஸ், டிரிபிள் ஹெச், ராக், ஸ்டோன் கோல்ட், பிக் ஷோ, ஜான் சீனா போன்ற பல பிரபலங்கள் 90ஸ் கிட்ஸ் களின் ஹீரோவாக விளங்கி இருக்கிறார்கள்.

தற்போது உள்ள இளசுகளுக்கு ரோமன் ரெய்ன்ஸ் என்றால் அவ்வளவு பிடிக்கும். இதில் wwe காட்பாதர் போல் இருக்கும் நபர் என்றால் அது ஹல்க் கோகன் தான். இவரால் தான் இந்த விளையாட்டு தொடர் மிகவும் பிரபலம் அடைந்தது. தற்போது ஹல்க்கோகனுக்கு வயது 69 ஆகிறது. எனினும் தன் வயதையும் பொருட்படுத்தாமல் இன்னும் ஹல்க்கோகன் சில மல்யுத்த போட்டிகளில் பங்கேற்கிறார்.
மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஹல்கோகன் தன்னுடைய டீ சட்டை கிழித்து தனது உடல் கட்டுகளை காட்டும் போது அதற்கு மயங்காதவர்களே இருக்க மாட்டார்கள்.இன்னும் 90ஸ் கிட்ஸ் தங்களுக்கு பெண் கிடைக்கவில்லை தங்களுக்கு காதல் அமையவில்லை என்று சுற்றி திரிந்து வருகின்றனர். இந்த நிலையில் 69 வயதான ஹல்க் கோகன் தன்னுடைய மூன்றாவது திருமணத்திற்கு தயாராகி விட்டார்.
அதுவும் தன்னைவிட 25 வயது குறைவான பெண்ணை அவர் மணக்க உள்ளார். ஹ்ல்க் கோகனுக்கு யோகா பயிற்சி செய்யும் பெண் தான் ஸ்கை. இவரிடம் யோகா பயிலும் போது கூடவே காதலையும் சேர்ந்து பயின்று இருக்கிறார். இதனால் ஸ்கை இன் பிறந்த நாள் அன்று தன்னுடைய காதலை ஹல்க்கோகன் கூறியிருக்கிறார். இதற்கு ஸ்கை ஓகே சொல்லிவிட்டாராம். இதனால் கையோடு நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது.
விரைவில் திருமணமும் நடைபெற இருக்கிறது.ஹல்க்கோகன் ஏற்கனவே லிண்டா கிளவுஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து அந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. சுமார் 26 ஆண்டுகால வாழ்க்கைக்கு பிறகு அவரை விவகாரத்து செய்த ஹல்க்கோகன் 2010 ஆம் ஆண்டு ஜெனிஃபர் மேக் டேனியல் என்ற பெண்ணை மணந்தார்.அவருடன் 11 ஆண்டுகாலம் வாழ்ந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ஸ்கையை ஹல்க்கோகன் திருமணம் செய்ய இருக்கிறார்.


Click it and Unblock the Notifications