For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடியலை என்னை விட்ருங்க.. அடுத்த மேட்ச்சுக்கு திட்டம் போட்ட WWE.. தெறித்து ஓடிய அண்டர்டேக்கர்!

நியூயார்க் : அண்டர்டேக்கர் ரெஸ்லிங் போட்டிகளில் ஆடுவதை தவிர்க்க நினைத்தாலும், அவரை வைத்து அடுத்த போட்டிக்கு அடி போட்டுள்ளது WWE.

Recommended Video

WWE planning for one more match for Undertaker

WWE ரெஸ்லிங் வீரர் அண்டர்டேக்கர் ஓய்வு பெறலாம் என கடந்த சில ஆண்டுகளாகவே முயன்று வருகிறார்.

ஆனால், அவரை விடாமல் வருடத்துக்கு ஒரீரு போட்டிகளில் ஆட வைத்து கல்லா கட்டி வருகிறது WWE நிர்வாகம். இந்த நிலையில், மீண்டும் ஒரு போட்டியில் அண்டர்டேக்கர் ஆட உள்ளார் எனவும் அதுவே அவரின் கடைசி போட்டியாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

WWE அண்டர்டேக்கர்

WWE அண்டர்டேக்கர்

அண்டர்டேக்கர் கடந்த முப்பது ஆண்டுகளாக WWE நிறுவனத்தில் இணைந்து ரெஸ்லிங் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். சுமார் 20 ஆண்டுகள் தீவிரமாக போட்டிகளில் பங்கேற்று வந்தார். கடைசி 10 ஆண்டுகளில் முக்கிய போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வருகிறார்.

ரெஸ்ஸில்மேனியா தோல்வி

ரெஸ்ஸில்மேனியா தோல்வி

வருடா வருடம் நடக்கும் ரெஸ்ஸில்மேனியா தொடரின் போட்டிகளில் பல ஆண்டுகளாக தோல்வி அடையாமல் இருந்த அண்டர்டேக்கரை சில ஆண்டுகள் முன்பு வீழ்த்தி அதிர்ச்சி ஏற்படுத்தினார் பிராக்லெஸ்னர். அதுவே அண்டர்டேக்கரின் கடைசி போட்டி என அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

ஓய்வு வதந்தி

ஓய்வு வதந்தி

அண்டர்டேக்கர் அதன் பின் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டது. ஆனால், மீண்டும் போட்டியில் பங்கேற்றார். தொடர்ந்து அடுத்த ஆண்டு ரெஸ்ஸில்மேனியா தொடருக்கு சரியாக ஆஜராகி விட்டார். அதனால், அண்டர்டேக்கர் ஓய்வு என்ற செய்தி வதந்தியாகவே முடிந்தது.

ஓரிரு போட்டிகள்

ஓரிரு போட்டிகள்

அப்போது முதல் ஆண்டுக்கு ஓரிரு போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வந்தார் அண்டர்டேக்கர். மூன்று ஆண்டுகளுக்கு முன் ரோமன் ரெய்ன்ஸ் இடையே ஆன போட்டி இரு தலைமுறைக்கு இடையே ஆன போட்டியாக காட்டப்பட்டது. அத்துடன் அண்டர்டேக்கர் ஓய்வு பெறுவார் என்பதையே அப்படி காட்டுவதாக அப்போது கூறப்பட்டது.

விடாத WWE

விடாத WWE

ஆனாலும், அவர் தொடர்ந்து ஒரீரு போட்டிகளில் பங்கேற்று வந்தார். உண்மையில் அண்டர்டேக்கர் ரெஸ்லிங்கில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என கடந்த பத்து ஆண்டுகளாக முயற்சி செய்து வருவதாகவும், WWE அவரை விடாமல் துரத்தி வருவதாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது.

ரெஸ்ஸில்மேனியா 36 போட்டி

ரெஸ்ஸில்மேனியா 36 போட்டி

இந்த நிலையில் ரெஸ்ஸில்மேனியா 36 தொடரில் கடந்த ஏப்ரல் மாதம் பங்கேற்றார் அண்டர்டேக்கர். அந்தப் போட்டியில் ஏஜே ஸ்டைல்ஸ்-ஐ புரட்டி எடுத்தார். அந்தப் போட்டி சினிமா சண்டை போல பின்னணி இசையுடன் காட்சிப்படுத்தப்பட்டு அண்டர்டேக்கரின் மவுசை இன்னும் அதிகரித்தது.

இதுதான் கடைசி போட்டியா?

இதுதான் கடைசி போட்டியா?

அந்த போட்டியின் முடிவில் அண்டர்டேக்கர் தன் புல்லட் வாகனத்தை எடுத்துக் கொண்டு போவது போல சிம்பாலிக்காக காட்டியது WWE. அதன் மூலம், அண்டர்டேக்கர் ஓய்வு பெற்று விட்டார் என ரசிகர்கள் நம்பினார்கள். ஆனால், WWE இப்போது அடுத்த திட்டத்தை தயார் செய்துள்ளது.

WWE அதிரடி திட்டம்

WWE அதிரடி திட்டம்

ஆம், எந்த போட்டியின் மூலம் அண்டர்டேக்கரருக்கு மவுசு கூடியதோ, அதே ஏஜே ஸ்டைல்ஸ்- உடன் இன்னொரு போட்டியில் அவரை சண்டை போட வைக்க WWE திட்டம் தீட்டி உள்ளதாக வதந்தி பரவி உள்ளது. விரைவில் வழக்கமான அரங்கில் ஸ்டைல்ஸ் - அண்டர்டேக்கர் மோத வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கடைசி போட்டி இதுதான்

கடைசி போட்டி இதுதான்

இப்போதும் இது தான் அண்டர்டேக்கரின் கடைசி போட்டி என்ற பேச்சு துவங்கி உள்ளது. ஆனாலும், WWE-இன் ஆசை மட்டும் அடங்கவே இல்லை. அண்டர்டேக்கர் இன்னும் ஒரு பத்தாண்டுகள் ஓய்வு பெறாமல் ஆடினாலும் சந்தேகம் இல்லை.

Story first published: Friday, May 15, 2020, 20:42 [IST]
Other articles published on May 15, 2020
English summary
WWE planning for one more match for Undertaker, despite the fact that Undertaker want to retire from professional wrestling.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+