Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WWE பக்கமே இனி போக மாட்டேன்.. திட்டித் தீர்த்த ரசிகர்கள்.. கோபத்தில் கொந்தளித்த ரோண்டா ரூஸி!

நியூயார்க் : WWE ரெஸ்லிங் நிகழ்ச்சிகளில் கடந்த 2018 - 19 காலகட்டத்தில் பங்கேற்றவர் தான் ரோண்டா ரூஸி.

Recommended Video

WWE பக்கமே இனி போக மாட்டேன் - பிரபல வீராங்கனை அறிவிப்பு

இவர் யூஎஃப்சி எனப்படும் கலப்பு தற்காப்பு கலை போட்டிகளில் மகளிர் பிரிவில் பங்கேற்று மிரட்டியவர்.

இவர் WWE நிகழ்ச்சிகளில் துவக்கத்தில் ரசிகர்களின் ஆதரவை பெற்று இருந்தார். ஆனால், ஒரு முறை வில்லன் போல இவர் நடந்து கொண்டதை ரசிகர்கள் வெறுத்தனர்.

ரசிகர்கள் திட்டு

ரசிகர்கள் திட்டு

WWE ரசிகர்கள் தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் தோன்றும் போதெல்லாம் திட்டித் தீர்த்தனர். அதை ஏற்றுக் கொள்ளா முடியாத ரோண்டா ரூஸி இதுவரை WWE போட்டிகளில் பங்கேற்கவில்லை. இனியும் தான் பங்கேற்கப் போவதில்லை என கூறி உள்ளார்.

யூஎஃப்சி சாம்பியன்

யூஎஃப்சி சாம்பியன்

யூஎஃப்சி கலப்பு தற்காப்புக் கலை போட்டியில் சாம்பியனாக இருந்தவர் தான் ரோண்டா ரூஸி. அந்த போட்டிகளில் அவரின் சிறப்பான பங்களிப்பை அடுத்து அவருக்கு "ஹால் ஆஃப் ஃபேம்" பட்டம் அளித்து கௌரவம் அளித்தது யூஎஃப்சி.

WWEஇல் ரோண்டா

WWEஇல் ரோண்டா

இந்த நிலையில், 2018 ஜனவரி முதல் WWE நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் துவங்கினார் ரோண்டா ரூஸி. முதலில் அவரை சிலர் வரவேற்றும், சிலர் எதிர்த்தும் வந்தனர். பின் சக வீராங்கனைகளை காப்பாற்றுவது, போட்டிகளில் நேர்மையாக நடந்து கொள்வது என ரசிகர்களை ஈர்த்தார் ரோண்டா.

ரோண்டா வெற்றி

ரோண்டா வெற்றி

2018 ரெஸ்ஸில்மேனியா 34 தொடரில் கர்ட் ஆங்கிள் உடன் சேர்ந்து, ட்ரிப்புள் எச் மற்றும் அவரது மனைவி ஸ்டெப்னி மிக்மேன்-ஐ எதிர்த்து சண்டையிட்டார். அதில் வெற்றி பெற்றார். அப்போது முதல் WWE ரசிகர்களின் ஆதரவை முழுமையாக பெற்றார்.

வில்லத்தனம்

வில்லத்தனம்

பின் நவம்பர் 2018 முதல் ஏப்ரல் 2019 வரை சார்லோட் பிளேர், பெக்கி லின்ச் உடன் மோதலை வளர்த்துக் கொண்டார். அப்போது அவரை வில்லத்தனமாக ரசிகர்களுக்கு காட்டி வந்தது WWE. அதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ரோண்டாவுக்கு கடும் எதிர்ப்பு இருந்தது.

பங்கேற்காத காரணம்

பங்கேற்காத காரணம்

இந்த நிலையில், ரெஸ்ஸில்மேனியா 35 தொடரில் பெக்கி லின்ச்சிடம் அவர் தோல்வி அடைந்தார். அதன் பின் அவர் WWE நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், அதற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

நன்றிகெட்டவர்கள்

நன்றிகெட்டவர்கள்

"என் குடும்பத்தினருடன் நேரத்தையும், சக்தியையும் செலவிட முடியாது என்றால் எதற்காக நான் அதை செய்ய வேண்டும். அதிலும், என் நேரத்தையும், சக்தியையும் சில நன்றிகெட்ட WWE ரசிகர்களுக்காக ஏன் செலவிட வேண்டும்? என கேள்வி எழுப்பினார் ரோண்டா.

முட்டாள் ரசிகர்கள்

முட்டாள் ரசிகர்கள்

"நான் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். அங்கே இருக்கும் ரெஸ்லிங் வீராங்கனைகளை விரும்புகிறேன். அங்கே இருப்பதையும் நான் விரும்புகிறேன். ஆனால், இறுதியில் இது எல்லாமே இந்த முட்டாள் ரசிகர்களுக்காக தான்" என காட்டமாக ரசிகர்களை வறுத்து எடுத்தார் ரோண்டா.

திட்டம் இல்லை

திட்டம் இல்லை

மேலும், தான் இனி முழு நேரமாக WWE நிகழ்ச்சிகளில் பங்கேற்க எந்த திட்டமும் இல்லை என்றும், WWEக்கு சென்றால் அங்கே ஒரு வருடத்தில் 200 நாட்கள் குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டும் என்றும் கூறினார் ரோண்டா ரூஸி.

Story first published: Saturday, April 11, 2020, 20:00 [IST]
Other articles published on Apr 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+