WWE Royal Rumble 2025 வெற்றி பெற்றது யார்?John cena-வுக்கு நடந்த டிவிஸ்ட்..சாம்பியன் பட்டம் யாருக்கு
இந்தியானோபோலிஸ் : 2025 WWE ராயல் ரம்பிள் தொடர் ரசிகர்களுக்கு பல பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கி இருக்கிறது. உலகில் மிகவும் பிரபலமான விளையாட்டு பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்றால் அது WWE தான். இதில் மிகவும் பிரபலமான தொடர் என்றால் அது ராயல் ரம்பிள்.
அதாவது இரண்டு நிமிட இடைவெளியில் 30 போட்டியாளர்கள் களத்திற்குள் நுழைவார்கள். இதில் 30 பேரும் ஒருவரை ஒருவர் களத்தின் கயிற்றுக்கு மேல் வழியாக மற்றவர்களை தூக்கி வெளியே எறிய வேண்டும். இதில் யார் கடைசியாக நிற்கிறார்களோ அவர்கள் wrestlemania தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்பு வழங்கப்படும்.

WWE விளையாட்டு உலகில் புகழ்பெற்ற சூப்பர் ஸ்டார் ஆன ஜான் சீனா கடைசி முறையாக ராயல் ரம்பிள் தொடரில் விளையாடினார். இதில் அவர் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த தொடரில் சிஎம் பங்க், ரோமன் ரெயின்ஸ், ரே மிஸ்டரியோ, ஜான் சீனா, செத் ரோலன்ஸ், ட்ரூ மேகண்டாயர், ஏஜே ஸ்டைல்ஸ் உள்ளிட்ட பிரபல வீரர்கள் பங்கேற்றனர்.
அது மட்டும் இல்லாமல் யூடியூபில் பிரபலமான ஐ ஸ்பீடு மற்றும் லோகன் பால் உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்றார்கள். பரபரப்பாக நடைபெற்ற இந்த தொடரில் 28 வீரர்கள் வெளியேறிய நிலையில் கடைசி இரண்டு வீரர்களாக ஜான்சீனா மற்றும் ஜே உசோ ஆகியோர் நின்றார்கள்.இதில் ஜான் சீனா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவரை ஜே யூஸோ களத்தை விட்டு கீழே தள்ளி வெற்றி பெற்றார். இதனால் ஜான் சீனா ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த தொடரில் WWE சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் கோடீ ரூட்ஸும் கெவின் ஓவன்சும் பல பரிட்சை நடத்தினர். மேலே தொங்கவிடப்பட்டிருக்கும் சாம்பியன் பெல்ட்களை ஏணியை வைத்து யார் முதலில் எடுக்கிறார்களோ அவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
இந்த போட்டியில் இருவருமே ஒரு போரை நிகழ்த்தினார்கள். ஏணியை ஆயுதமாக பயன்படுத்தி இருவரும் பயங்கரமாக தாக்கி கொண்டனர். ஒரு கட்டத்தில் கெவின் ஓவன்சை தூக்கி ஏணியில் கோடீ ரூட்ஸ் போட அந்த ஏணியே உடைந்தது. இதில் கெவின் ஓவன்ஸ்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து கோடீ ரூட்ஸ் ஏணியில் ஏறி தனது சாம்பியன் பட்டத்தை எடுத்து தக்க வைத்துக் கொண்டார். இதேபோன்று மகளிருக்கான ராயல் ரம்பிள் போட்டி நடைபெற்றது. இதில் சார்லட் ஃப்ளேயர் வெற்றி பெற்றார்.


Click it and Unblock the Notifications