Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WWE Royal Rumble- யூடியூபர் Speed- ஐ கொத்து பரோட்டாக்கிய ப்ரான் பிரேக்கர்.. சிக்க வைத்த Triple H

இன்டியானாபோலிஸ் : WWE ராயல் ரம்பிள் மல்யுத்த போட்டியில் பிரபல யூட்யூபர் ஐசோ ஸ்பீட் மாற்றுவீரராக களம் இறங்கி மிதிவாங்கிய சம்பவம் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி இருக்கிறது. wwe தொடரின் மிகவும் பிரபலமான ஒன்று ராயல் ரம்பிள்,இதில் 30 வீரர்கள் இரண்டு நிமிடத்திற்கு இடைவெளியில் ஒவ்வொருவராக களத்திற்கு வருவார்கள்.

இதில் ஒரு வீரர் மற்றொரு வீரர்களை ரிங்கின் கயிற்றுக்கு மேல் வழியாக தூக்கி எறிய வேண்டும். இதில் கடைசியாக யார் நிற்கிறார்களோ அவர்கள் Wrestlemania தொடரின் சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் பங்கேற்பார்கள்.

wwe royal rumble youtuber ishow speed triple h john cena sports news

இந்த சூழலில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் எட்டாவது வீரராக அக்கிரா தோசோகா என்பவர் களத்திற்கு வந்தார். அப்போது போட்டியில் இருந்து வெளியேறிய வீரர் தனது கோபத்தை அக்கிரா மீது காட்டினார். இதில் அக்கிரா தோஷோவா காயம் அடைந்தார். இதனை அடுத்து மாற்று வீரராக போட்டியை பார்க்க வந்த யூடியூபர் ஸ்பீடை WWE தலைமை அதிகாரி Triple H களத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்.

இதனை அடுத்து மாற்று வீரராக சென்ற ஸ்பீட் பிரேக்கர் என்ற வீரரின் உதவியுடன் கர்டீஸ் என்ற வீரரை களத்தை விட்டு வெளியேற்றினார். ஒரு மல்யுத்த வீரரை வெளியேற்றி விட்டோம் என்ற மகிழ்ச்சியை அவர் கொண்டாடிய நிலையில் உடனே பிரேக்கர் என்ற வீரர் அவரை எதிர்பாராத விதமாக கடுமையாக தாக்கினார்.

இதில் ஸ்பீடு நிலைகுலைந்து களத்திலே விழுந்தார். இதனை அடுத்து ஸ்பீடை கொத்து பரோட்டா போல் கொத்தி எடுத்த பிரேக்கர் அப்படியே தூக்கி வெளியே வீசினார். இதில் ஸ்பீடுக்கு கடும் காயம் ஏற்பட்டது. இதை அடுத்து ஸ்பீட் மருத்துவ குழுவினரின் உதவியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். அப்போது ஸ்பீடுக்கு கால் மற்றும் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டு இருந்தது.

அப்போது பேசிய ஸ்பீட்," இனி நான் டபிள்யூ டபிள்யூ பக்கமே வரமாட்டேன், என்னால் வழி தாங்க முடியவில்லை"என்று கூறினார். ஆனால் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு பேசிய ஸ்பீட், எந்த ஒரு முன்னேற்பாடும் இன்றி களத்திற்குள் வந்தேன். இனி அடுத்த ஆண்டு ராயல் ரம்பளுக்கு கண்டிப்பாக வருவேன். இந்த ஒரு ஆண்டில் நான் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள போகிறேன். அடுத்த ராயல் ரம்பளில் அனைத்து வீரர்களுக்கும் நான் எச்சரிக்கை கொடுக்கின்றேன் என்று கருத்து தெரிவித்திருந்தார். ஸ்பீடின் இந்த நிலைமை சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

Story first published: Monday, February 3, 2025, 14:46 [IST]
Other articles published on Feb 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+