Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என் பையனை முதல்ல காப்பாத்துங்க.. மகனைக் காப்பாற்ற உயிரைக் கொடுத்த பிரபல WWE வீரர்.. ரசிகர்கள் ஷாக்!

லாஸ் ஏஞ்சலஸ் : பிரபல WWE வீரர் ஷாட் காஸ்பார்ட்டின் உடல் கடந்த புதன் கிழமை அன்று கலிபோர்னியாவின் வெனிஸ் கடற்கரையில் ஒதுங்கியது.

Recommended Video

Shad Gaspard passed away while saving his son

கடந்த மூன்று நாட்கள் முன்பு அவரும், அவரது 10 வயது மகனும் அந்த கடற்கரையில் நீச்சலடிக்க சென்று அலைகளின் பிடியில் சிக்கினர்.

அப்போது காப்பாற்ற வந்த லைப்கார்டுகளிடம் தன் மகனை முதலில் காப்பாற்றுமாறு கூறி தன் உயிரை கொடுத்துள்ளார்.

கிரைம் டைம் டேக் டீம்

கிரைம் டைம் டேக் டீம்

ஷாட் காஸ்பார்ட் என்று கூறுவதை விட WWE-இல் கிரைம் டைம் டேக் டீம் என்று கூறினால் உடனே தெரிந்து விடும். அந்த டேக் டீமில் ஜேடிஜி என்ற உயரமான ரெஸ்லிங் வீரருடன் ஜோடியாக போட்டிகளில் பங்கேற்று வந்தார் ஷாட் காஸ்பார்ட்.

கடற்கரை

கடற்கரை

கொரோனா வைரஸ் காரணமாக கலிபோர்னியா கடற்கரைகள் மூடப்பட்டு இருந்தன. அந்த கடற்கரைகள் சில நாட்கள் முன்பு திறக்கப்பட்டன. அதை அடுத்து அங்கே நீச்சல் அடிக்க தன் 10 வயது மகன் ஆர்யேவுடன் சென்றுள்ளார் ஷாட் காஸ்பார்ட்.

காப்பாற்றும் முயற்சி

காப்பாற்றும் முயற்சி

அப்போது சுமார் 6 அடிக்கும் பெரிதாக அலைகள் தொடர்ந்து வந்தன. அதில் சிக்கிய ஷாட் காஸ்பார்ட் மற்றும் அவரது மகன் ஆர்யே கடலுக்கு உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனர். உடனடியாக கோஸ்ட் கார்டுகள் அவர்களை காப்பாற்ற களமிறங்கினர்.

மிதக்கும் குடுவைகள்

மிதக்கும் குடுவைகள்

முதலில் கடலில் மிதக்கும் குடுவைகளை போட்டு, அதை பிடித்துக் கொண்டு முன்னேறுமாறு காப்பாற்ற வந்த லைப்கார்டு ஒருவர் கூறி உள்ளார். ஆனால், அலைகள் கடுமையாக இருந்ததால் 10 வயது ஆர்யேவால் அதை பிடித்துக் கொள்ள முடியவில்லை.

அதிக எடை

அதிக எடை

இதையடுத்து இருவரையும் கரைக்கு இழுத்துச் செல்லும் முயற்சியில் இறங்கினர் லைப்கார்டுகள். ஷாட் காஸ்பார்ட் 6 அடி ஏழு அங்குல உயரம் மற்றும் அதிக எடை கொண்ட, ஆஜானுபாகுவான உடலைக் கொண்டவர். அதனால், அவரை எளிதாக கையாள முடியவில்லை.

மகனை காப்பாற்றுங்கள்

மகனை காப்பாற்றுங்கள்

இந்த நிலையில், தன் மகனை காப்பற்றிய பின் தன்னைக் காப்பாற்றுமாறு ஷாட் காஸ்பார்ட் கூறி உள்ளார். அதை ஏற்று ஆர்யேவை முதலில் காப்பாற்றி உள்ளனர். அடுத்து ஷாட் காஸ்பார்ட்டை காப்பாற்ற வந்தவர்களால் அவர் எங்கே இருக்கிறார் என கண்டுபிடிக்க முடியவில்லை.

தேடுதல் பணி

தேடுதல் பணி

சுமார் 16.5 மணி நேரம் அவரை மீட்க தேடுதல் பணி நடைபெற்றது. எனினும், அவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் தேடுதல் நடவடிக்கையை நிறுத்தினர். இந்த நிலையில், புதன்கிழமை அன்று காலையில் அவரது உயிரற்ற உடல் கரையில் ஒதுங்கியது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

தன் மகனைக் காப்பாற்ற தன் உயிரைக் கொடுத்த ரெஸ்லிங் வீரர் ஷாட் காஸ்பார்ட் பற்றிய செய்தி அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரெஸ்லிங் ரசிகர்கள் பலர் தங்கள் அதிர்ச்சியை, சோகத்தை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மற்றொரு பக்கம்

மற்றொரு பக்கம்

2008 முதல் 2010 வரை தொடர்ந்து WWE ரெஸ்லிங் போட்டிகளில் பங்கேற்று வந்தார். WWE-ஐ விட்டு விலகிய பின் சில திரைப்படங்களில் நடித்தார். அதன் பின் கிராபிக் நாவல் கூட எழுதினார். மிகவும் நகைச்சுவை குணம் கொண்டவர் என அவரது நண்பர்கள் அவரைப் பற்றி குறிப்பிடுகின்றனர்.

Story first published: Friday, May 22, 2020, 0:38 [IST]
Other articles published on May 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+