Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WWE போட்டிகளை இனி டிவி சேனல்களில் பார்க்க முடியாது.. ஏப்.1 ஆம் தேதி முதல் இந்திய ரசிகர்களுக்கு ஆப்பு

80ஸ், 90ஸ் மற்றும் 2k கிட்ஸ் என அனைத்து தரப்பினர் வாழ்க்கையிலும் wwe மல்யுத்த போட்டி என்பது ஒரு மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். பள்ளி முடிவடைந்து வீட்டுக்கு வந்தவுடன் தொலைக்காட்சியை போட்டுவிட்டு நாம் பார்க்கும் முதல் நிகழ்ச்சி டபிள்யூ டபிள்யூ இ போட்டிகளாக தான் இருக்கும்.

அந்த வகையில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கும் டபிள்யூ டபிள்யூ இ போட்டி வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்திருக்கிறது. டபிள்யூ டபிள்யூ இ போட்டிகளில் நடைபெறும் சில Gimmiks களை உண்மை என நம்பி அதைப்பற்றி அடுத்த நாள் பள்ளியில் நாம் பேசாமல் இருந்திருக்க மாட்டோம்.

WWE Sports

அந்த வகையில் 2000 ஆண்டிலிருந்து தற்போது வரை 25 ஆண்டுகளாக இந்த டபிள்யூ டபிள்யூ இ போட்டிகளை டென் ஸ்போர்ட்ஸ் மற்றும் சோனி நிறுவனம் தான் ஒளிபரப்பு செய்து வந்தது. இந்த வகையில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று பழமொழிக்கு ஏற்ப டபிள்யூ டபிள்யூ இ போட்டிகள் இனி ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொலைக்காட்சி டிவி சேனல்களில் பார்க்க முடியாது என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

உலகம் முழுவதும் தற்போது ஓடிடி நோக்கி சென்று கொண்டுள்ள நிலையில் wwe போட்டிகளை தொலைக்காட்சியில் போடும் நேரத்தில் பார்க்க பலருக்கு முடியவில்லை. இதனால் டபிள்யூ டபிள்யூ இ போட்டிகளை இனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப் போவதில்லை என அறிவிப்பை அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான ட்ரிபிள் ஹெச் வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்தியாவில் டிவி சேனல்களில் wwe போட்டிகளை பார்க்க முடியாது. அதற்கு மாற்றாக இனி டபிள்யூ டபிள்யூ இ போட்டிகள் அனைத்தும் நெட்ஃப்லிக்ஸ் ஒளிபரப்பு ஆகும். ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில் தற்போது இந்தியாவில் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் டபிள்யூ டபிள்யூ போட்டிகள் அனைத்தும் நெட்பிளிக்சில் ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என கூடுதல் கட்டணம் எதையும் நெட்பிளிக்ஸ் வசூலிக்கவில்லை.

மாதம் ரூ. 199 கட்டினால் மொபைல் மற்றும் டிவியில் நெட்பிலிக்ஸ் சேவையை பார்க்கலாம். எனினும் தொலைக்காட்சி சேனல் அழிவதையே இந்த மாற்றம் காட்டுவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இனி WWE போட்டிகளை சேனல்களில் பார்க்க முடியாததை நினைத்து அவர்கள் வருத்தத்தில் உள்ளனர். இனி டபிள்யு டபிள்யு இ போட்டிகளை பார்ப்பதற்காக நெட்ஃபிக்ஸுக்கும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய நெருக்கடிக்கு தாங்கள் தள்ளப்பட்டு இருப்பதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Story first published: Monday, March 17, 2025, 14:51 [IST]
Other articles published on Mar 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+