Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WWE John cena-வின் கடைசி போட்டி எப்போது? நேரம்? டிவியில் பார்க்க முடியாது.. ஒடிடியில் மட்டும் நேரலை

வாசிங்டன்: wwe எனப்படும் பொழுதுபோக்கு மல்யுத்த தொடரில் முடி சூடா மன்னனாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் விளையாடி வந்த ஜான் சீனா சனிக்கிழமையுடன் ஓய்வு பெற உள்ளார். 2002 ஆம் ஆண்டு wwe மல்யுத்தம் தொடரில் அறிமுகமான ஜான் சீனா தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

Wwe-வில் சேர்ந்து சில மாதங்களிலே நம்பர் ஒன் வீரராக உருவெடுத்து பல சூப்பர் ஸ்டார்களை வீழ்த்தினார். தன்னுடைய வித்தியாசமான Rap பேச்சு மற்றும் சண்டைகள் மூலம் ரசிகர்கள் இதயத்தை கட்டிப்போட்ட ஜான் சீனா பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

John cena last match

இதனால் ஜான் சீனாவுக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பெரும் அளவு ரசிகர்கள் பட்டாளம் உருவானது. இந்த நிலையில் ஜான் சீனா wwe போட்டியில் இருந்து விடை பெறுவதாக கடந்த ஆண்டு அறிவித்து இருந்தார். 2025 ஆம் ஆண்டு 35 போட்டிகளில் மட்டும் தான் பங்கேற்பேன் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

அதன்படி ஜான் சீனாவின் கடைசி போட்டி இந்திய நேரப்படி டிசம்பர் 14ஆம் தேதி காலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. அமெரிக்க நேரப்படி டிசம்பர் 13ஆம் தேதி இந்த போட்டி நடக்கும் 17 முறை wwe சாம்பியன் பட்டத்தை வென்ற ஜான் சீனா, அதிக முறை பட்டம் வென்ற மல்யுத்த வீரர் என்று பெருமையை பெற்றிருக்கிறார்.

90ஸ் மற்றும் 2k கிட்ஸ் களின் ஆதர்ச நாயகனாக விளங்கிய ஜான் சீனா தற்போது கடைசி போட்டியில் Gunther என்ற வீரரை எதிர்கொள்ள உள்ளார். கடைசியாக நடைபெற்ற போட்டியில் ஜான் சீனா ரே மிஸ்டரியோவின் மகனான டோமினிக் மிஸ்டரியோவிடம் தோல்வியை தழுவி இருந்தார். இதன் மூலம் தனது இன்டர் கான்டினென்டல் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் அவர் இழந்தார்.

தற்போது கடைசி போட்டியில் ஜான் சீனா வெற்றியுடன் செல்வாரா? இல்லை தோல்வியை தழுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது. இந்த போட்டி இந்தியாவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படாது. எனினும் சோனி லிவ்(sony liv) ஆப்பில் டிசம்பர் 14ஆம் தேதி காலை 6.30 மணிக்கு Saturday night main event தொடரில் ஜான் சீனாவின் தி லாஸ்ட் டைம் இஸ் நவ் என்று போட்டியை பார்க்கலாம். ஜான் சீனா ஓய்வு மூலம் 90ஸ் கிட்ஸ்களின் குழந்தை பருவம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்து விட்டதாக ரசிகர்கள் பலரும் தெரிவித்திருக்கின்றார்கள்.

Story first published: Friday, December 12, 2025, 11:36 [IST]
Other articles published on Dec 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+