என் கால் சைஸ் கூட இல்ல.. நீ பேசுறியா? UFC வீரருக்கு WWE வீரர் ரோமன் ரெயின்ஸ் பதிலடி
நியூயார்க் : பிரபல WWE பொழுதுபோக்கு மல்யுத்த வீரருமான ரோமன் ரெயின்ஸ் யுஎப்சி வீரர் கோனர் மெக்கிரெகருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கும் பழைய ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு பின்னால் ஒரு காரணமும் இருக்கிறது.
மல்யுத்த போட்டி பொழுதுபோக்குக்காக சீரியல் போல் கதை வசனம் எழுதி உருவாக்கப்பட்ட விளையாட்டு தான் WWE ஆகும். இதற்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். தி அண்டர்டேக்கர், ராக் ஜான் சீனா போன்ற பல பிரபல வீரர்கள் விளையாடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்திருக்கிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது 2கே கிட்ஸ்களின் நாயகனாக ரோமன் ரெயின்ஸ் விளங்கி வருகிறார். இந்த நிலையில் யுஎப்சி எனப்படும் மார்ஷியல் ஆர்ட்ஸ் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட போட்டியாகும். இதில் கோனர் மெக்கிரகர் என்பவர் பிரபலமான வீரராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் ஒரு ட்வீட் போட்டு இருந்தார்.
அதில் டபிள்யூ டபிள்யூ ரசிகர்களையும் மல்யுத்த வீரர்களையும் நான் தவறாக பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். அவர்களை நான் அவமரியாதையாக நடத்தவில்லை. இருந்தாலும் WWEவில் உள்ள ஒட்டுமொத்த வீரர்களையும் நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரண்டு முறை அடித்து வீழ்த்துவேன் என்று கோனார் மெக்ரேகர் கூறியிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுத்த WWE வீரர் ரோமன் ரெயின்ஸ், நீ என் கால அளவு கூட கிடையாது. வாயை மூடு என்று பதிலளித்தார். இது நடந்து சுமார் எட்டு ஆண்டுகள் ஆகிறது. ஆனால் தற்போது இந்த பதிவு மீண்டும் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் டபிள்யூ டபிள்யூ ஈ நிறுவனத்தை யு.எப்.சி நிறுவனம் வாங்கி விட்டது. இதன் மூலம் டபிள்யூ டபிள்யூ ஈ நிறுவனம் புதிய ஒரு வடிவத்தை பெற்றிருக்கிறது. wwe நடத்தப்படும் என் எக்ஸ் டி தொடர் முதல் முறையாக யுஎப்சி மைதானத்தில் நடைபெறுகிறது.
இதன் மூலம் டபிள்யூ டபிள்யூ ஈ, யூஎப்சி யும் ஒன்றாக இணைத்து போட்டிகளை நடத்தவும் திட்டமிட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக பிரபல யுஎப்சி வீரர் கோனார் மெக்கிரேகர் ரோமன் ரெயின்ஸ் உடன் மோத வைக்க யு எப் சி நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அதற்கு ஒரு ஆரம்ப புள்ளியாக இந்த ட்விட் இருக்க வேண்டும் என தற்போது அதனை மீண்டும் பல சமூக வலைத்தள பக்கம் மூலம் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அதில் டபிள்யூ டபிள்யூ ஈ வீரர்கள் பெருசா ? இல்லை யுஎப்சி வீரர்கள் பெருசா என இரு தரப்பு ரசிகர்களும் சண்டை போட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications