Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WWE Summerslam 2025: சாம்பியன் பட்டத்தை இழந்த John cena.. மீண்டும் திரும்பிய பீஸ்ட்.. முடிவுகள்

நியூ ஜெர்சி: WWE மல்யுத்த பொழுதுபோக்கு விளையாட்டின் பிரதான தொடர்களில் ஒன்றான சம்மர்ஸ்லாம் (Summerslam) 38வது சீசன் நியூ ஜெர்சியில் நடைபெற்றது. wwe வரலாற்றிலேயே முதல்முறையாக சம்மர்ஸ்லாம் தொடர் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இதில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த இரண்டு நாளில் பங்கேற்றனர். இதில் இரண்டாவது நாளில் இறுதிப் போட்டியில் wwe சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் நடப்பு சாம்பியனாக களம் இறங்கிய ஜான் சீனாவும் கோடி ரூட்ஸூம் மோதினர்.

WWE Summerslam 2025

20 ஆண்டுகளுக்கு மேல் ஹீரோ கதாபாத்திரம் ஏற்றி wwe போட்டியில் சண்டை போட்டு வந்த ஜான் சீனா, மார்ச் மாதம் வில்லனாக மாறினார். இது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. கடந்த ரஸில்மேனியா தொடரில் கோடி ரூட்சை வீழ்த்தி 17 வது முறையாக டபிள்யூ டபிள்யூ இ சாம்பியன் பட்டத்தை வென்று ஜான் சீனா உலக சாதனை படைத்தார்.

ஹீரோவாக மாறிய ஜான் சீனா:

அதிலிருந்து தொடர்ந்து வில்லனாகவே செயல்பட்டு வந்த ஜான் சீனா தற்போது மீண்டும் ஹீரோ கதாபாத்திரத்திற்கு மாறினார். இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தனது வழக்கமான என்ட்ரன்ஸ், ஸ்டைல் என அனைத்தையும் பாலோ செய்து ஜான் சீனா குதூகலப்படுத்தினார்.

கோடி ரூட்ஸ்க்கு கடும் சவாலை சீனா அளித்தார். இதில் சாம்பியன் பட்டத்திற்காக ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். டேபிள்களில் ஒருவரை ஒருவர் எறிவது, ஸ்டீல் கம்பியின் தூக்கி எறிவது என போட்டி பட்டையை கிளப்பியது. இதில் ஜான் சீனா தன்னுடைய பழைய ஸ்டைலில் ரெஸ்லிங் மூவ்களை செய்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.

யாரும் எதிர்பாராத முடிவுகள்:

37 நிமிடம் 45 வினாடிகள் நீடித்த இந்த போட்டியில் கோடி ரூட்ஸ் ஜான் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்றார். இந்த நிலையில் போட்டி முடிவடைந்த உடன் ஜான் சீனா ரசிகர்களிடம் நன்றி தெரிவித்துக் கொண்டிருந்த போது திடீரென்று பிரபல மல்யுத்த வீரர் பிராக்லெஸ்னர் திரும்பினார். wwe தொடரில் விளையாட அந் நிறுவனத்தால் தடை பெற்ற் நிலையில் தற்போது மீண்டும் அவர் திரும்பி ஜான் சீனாவை தாக்கினார். இது யாரும் எதிர்பாராத முடிவாக அமைந்தது.

இதே போன்று இண்டர் காண்டினென்டல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஏஜி ஸ்டைல்சை வீழ்த்தி டோமினிக் மிஸ்டாரியோ சாம்பியன் பட்டத்தை வென்றார். அமெரிக்க சாம்பியன்ஷிப் பட்டத்தை சோலோ ஸ்கோவாகவும், மகளிர் இண்டர் காண்டிநெட்டல் சேம்பியன் பட்டத்தை பெக்கி லெச்சும் கைப்பற்றினர். இதேபோன்று மகளிருக்கான உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை நையோமி வென்றார்.

மற்ற போட்டியின் முடிவுகள்:

இதேபோன்று நேற்று இரவு நடைபெற்ற wwe ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் கந்தரை வீழ்த்தி சி எம் பங்க் சாம்பியன் பட்டத்தை வென்றார். எனினும் அவருடைய மகிழ்ச்சி 5 நிமிடம் கூட நீடிக்கவில்லை. அதன் பின் செத் ராலன்ஸ் தன்னுடைய மணி இன் தி பேங்க் காண்ட்ராக்ட் வைத்து சிஎம் பங்குடன் மொத, இதில் சி எம் பங்க் தோல்வியை தழுவினார். மணி இன் தி பேங்க் காண்ட்ராக்ட் ஐ வைத்து யார் எப்போது வேண்டுமானாலும் டபிள்யூ டபிள்யூ இ சாம்பியன் பட்டத்திற்கு மோதலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, August 4, 2025, 9:49 [IST]
Other articles published on Aug 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+