Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரபல WWE மல்யுத்த வீரர் Bray Wyatt காலமானார்.. 36 வயதில் உயிரிழந்ததால் ரசிகர்கள் சோகம்

அமெரிக்கா: பிரபல WWE மல்யுத்த வீரர் Bray wyatt தனது 36 வயதில் காலமானார். உலகம் முழுவதும் WWE மல்யுத்தம் போட்டிகளை பார்ப்பதற்கு என தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில் மூன்றாம் தலைமுறை வீரரான ப்ரே வியாட் தன்னுடைய வித்தியாசமான சண்டை மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

1987 ஆம் ஆண்டு ஃப்ளோரிடாவில் பிறந்த ப்ரே வியாட்டின் இயற்பெயர் விண்தம் லாரன்ஸ் ரொட்டெண்டா. இவருடைய தாத்தாவும், தந்தையும் மிகப்பெரிய மல்யுத்த வீரராக இருந்தார்கள். மேலும் இவருடைய மாமாவும், சகோதரர்களும் கூட மல்யுத்த வீரராக இருப்பதால் இவருடைய ரத்தத்திலே மல்யுத்தம் ஊறி இருக்கிறது.

WWE Superstar Bray Wyatt dies at age of 36 due to heart attack

2009 ஆம் ஆண்டு மல்யுத்த பொழுதுபோக்கு நிறுவனமான WWE வில் ப்ரே வியாட் இணைந்தார். அவர் பிரபலமானது 2013 ஆம் ஆண்டு தான். வியாட் ஃபேமிலி என பெயரிடப்பட்டு அதில் வில்லனாக தோன்றி தன்னுடைய வித்தியாசமான சண்டை நுணுக்கங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.மூன்று முறை WWE உலக சாம்பியன் பட்டத்தையும் இரண்டு முறை யுனிவர்சல் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி இருக்கிறார்.

ஸ்மாக்டவுன் மற்றும் ரா போன்ற பொழுதுப் போக்கு மல்யுத்த தொடரில் Tag team சாம்பியன் பட்டங்களையும் கைப்பற்றி இருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு WWE வில் இருந்து விலகிய ப்ரே வியாட் மீண்டும் அக்டோபர் மாதம் 2022 ஆம் ஆண்டு திரும்பினார். அதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டு சிறிது காலம் ஓய்வில் இருந்த ப்ரே வியாட் மீண்டும் 2023 ஆம் ஆண்டு ராயல் ரம்பிள் தொடரில் பங்கேற்றார்.

இந்த நிலையில் 36 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு காலமாகி இருக்கிறார். இந்த நிலையில் இந்த தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ள WWE நிறுவன தலைமை செயல் அதிகாரியான ட்ரிபிள் எச்ழ் ப்ரே வியாட்டின் மரணம் அதிர்ச்சி அளிப்பதாகவும் இந்த இக்கட்டான நேரத்தில் அவருடைய குடும்பத்திற்கு துணை நிற்பதாகவும் கூறியுள்ளார்.

ப்ரே வியாட்டின் மரணத்திற்கு பல ரசிகர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். ப்ரே வியாட்டின் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டுள்ள வீடியோவில் தாங்கள் யார் மீது பிரியமாக இருக்கிறீர்களோ, அவர்களை கடைசிவரை பாசமாக பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறியிருந்தார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Story first published: Friday, August 25, 2023, 11:17 [IST]
Other articles published on Aug 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+