WWE ஜாம்பவான் “தி ராக்”-கிற்கு கொரோனா பாதிப்பு.. குடும்பத்தில் அனைவருக்கும் தொற்று!
நியூயார்க் : WWE ரெஸ்லிங் ஜாம்பவானும், பிரபல ஹாலிவுட் நடிகருமான தி ராக் எனும் டிவைன் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தகவலை அவரே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதில் இருந்து மீண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிகம் சம்பாதிக்கும் நடிகர்
WWE ரெஸ்லிங் உலகில் சாதாரண வீரராக வாழ்க்கையை தொடங்கி பின் ரெஸ்லிங் உலகில் பெரிய நட்சத்திரமாக உயர்ந்து, அப்படியே ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார் தி ராக் எனும் டிவைன் ஜான்சன். இன்று ஹாலிவுட்டில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களில் முதல் வரிசையில் இருக்கிறார்.

குடும்பத்திற்கு பாதிப்பு
அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள செய்தி WWE ரசிகர்கள் மற்றும் ஹாலிவுட் ரசிகர்கள் இடையே வேகமாக பரவி வருகிறது. டிவைன் ஜான்சன் வெளியிட்டுள்ள வீடியோவில், தன் மனைவி லாரன் மற்றும் இரு மகள்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் கடினமானது
மேலும், இது மிகவும் கடினமானது, குடும்பமாக இதை தாங்கிக் கொண்டது சவாலானது. எனக்கு தனிப்பட்ட முறையில், காயத்தில் இருந்து மீள்வதை விடவும், உடைந்து போவதை விடவும் கடினமாக இருந்தது. என் குடும்பத்தை, என் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்ற என் முக்கிய பொறுப்பால் நான் இப்படி உணர்கிறேன் என ஜான்சன் கூறி உள்ளார்.

மீண்டு விட்டோம்
தற்போது அவரது குடும்பமும், அவரும் பாதிப்பில் இருந்து மீண்டு விட்டதாகவும் அவர் கூறி உள்ளார். மேலும் அவர் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். முகக் கவசம் அணிவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications