For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இருந்தா அவரை மாதிரி இருக்கணும்.. அண்டர்டேக்கரையே பொறாமைப்பட வைத்த ரெஸ்லிங் லெஜன்ட்!

நியூயார்க் : அண்டர்டேக்கர் சமீபத்தில் WWE ரெஸ்லிங் போட்டிகளில் இருந்து தன் ஓய்வை அறிவித்தார்.

ஆனால், ஓய்வு முடிவில் அண்டர்டேக்கர் பல ஆண்டுகள் குழப்பத்திற்கு பின் தான் முடிவு எடுத்தார்.

கடந்த 7, 8 ஆண்டுகளாகவே அவர் குழப்பம் நீடித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், மற்றொரு ஜாம்பவான் தெளிவாக அண்டர்டேக்கர் போட்டியுடன் தன் கேரியரை முடித்துக் கொண்டார்.

ஷான் மைக்கேல்ஸ்

ஷான் மைக்கேல்ஸ்

அந்த ரெஸ்லிங் ஜாம்பவான் ஷான் மைக்கேல்ஸ். அவர் ஓய்வு முடிவை சரியான நேரத்தில், சரியான வழியில் எடுத்தார். அவரைப் போல நானும் இந்த விஷயத்தில் தெளிவாக இருந்திருக்க வேண்டும் என அண்டர்டேக்கர் பொறாமைப்பட்டுள்ளார்.

அண்டர்டேக்கர் - ஷான் மைக்கேல்ஸ்

அண்டர்டேக்கர் - ஷான் மைக்கேல்ஸ்

WWE ரெஸ்லிங் போட்டிகள் சிறந்த பொழுது போக்கு நிகழ்ச்சியாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. அதில் துவக்கம் முதலே இருந்து வந்தவர் அண்டர்டேக்கர். அவருடன் சம காலத்தில் WWE-வில் கலக்கியவர் ஷான் மைக்கேல்ஸ்.

புகழின் உச்சியில் ஷான் மைக்கேல்ஸ்

புகழின் உச்சியில் ஷான் மைக்கேல்ஸ்

அண்டர்டேக்கரை விட ஷான் மைக்கேல்ஸ் முதல் பத்து ஆண்டுகளில் புகழின் உச்சியில் இருந்தார். மிஸ்டர். ரெஸ்ஸில்மேனியா என்றே அவரை அழைப்பார்கள். அந்த அளவுக்கு பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார் ஷான் மைக்கேல்ஸ்.

காயமாக்கி அனுப்பிய அண்டர்டேக்கர்

காயமாக்கி அனுப்பிய அண்டர்டேக்கர்

இடையே அண்டர்டேக்கருடன் நடந்த போட்டி ஒன்றில் அவருக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. சில ஆண்டுகள் WWE-ஐ விட்டு விலகி இருந்தார் ஷான் மைக்கேல்ஸ்.

சவால் விட்ட ஷான் மைக்கேல்ஸ்

சவால் விட்ட ஷான் மைக்கேல்ஸ்

பின்னர் போட்டிகளில் பங்கேற்று வந்த ஷான் மைக்கேல்ஸ் 2010இல் அண்டர்டேக்கருடன் முக்கிய தொடரான ரெஸ்ஸில்மேனியாவில் மோதினார். அந்தப் போட்டியில் தான் தோற்றால் தான் இனி ரெஸ்லிங் போட்டிகளில் பங்கேற்க மாட்டேன் என சவால் விட்டார் ஷான் மைக்கேல்ஸ்.

அண்டர்டேக்கர் வெற்றி

அண்டர்டேக்கர் வெற்றி

அந்தப் போட்டியில் அண்டர்டேக்கர் வெற்றி பெற்றார். ஷான் மைக்கேல்ஸ் அத்துடன் ரெஸ்லிங் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அது மிகச் சிறந்த போட்டிகளில் ஒன்றாகவும் அமைந்தது. ஷான் மைக்கேல்ஸ் இன்னும் சில ஆண்டுகள் சண்டை போட முடியும் என்றாலும் ஓய்வு முடிவை எடுத்தார்.

பொறாமைப்படுவதாக கூறினார்

பொறாமைப்படுவதாக கூறினார்

அது குறித்து சமீபத்தில் தன் ஓய்வு முடிவை அறிவிக்கும் முன் பேசிய அண்டர்டேக்கர், தான் ஓய்வு விஷயத்தில் ஷான் மைக்கேல்ஸ்-ஐ பார்த்து பொறாமைப்படுவதாகவும், ரெஸ்லிங்கை விட்டு விலகும் முடிவில் தான் அவர் அளவுக்கு தெளிவாக இருக்க வேண்டும் என விரும்பியதாகவும் கூறி இருந்தார்.

சரியான முடிவு

சரியான முடிவு

இதை ஷான் மைக்கேல்ஸ்-இடமும் அண்டர்டேக்கர் பல முறை கூறி இருக்கிறாராம். ஷான் மைக்கேல்ஸ் கூறுகையில், "சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்ததாக அண்டர்டேக்கர் ஒருமுறை கூறினார்" என்றார். ஷான் மைக்கேல்ஸ் கேரியரை முடித்த அண்டர்டேக்கர் அவருக்கு பின் பத்து ஆண்டுகள் கழித்தே ஓய்வு முடிவை எடுத்துள்ளார்.

Story first published: Friday, June 26, 2020, 18:21 [IST]
Other articles published on Jun 26, 2020
English summary
WWE Undertaker envious of Shawn Michaels over retirement decision
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+