For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

WWE மோதல்கள் உண்மையா? பொய்யா? முதல் முறையாக உண்மையை உடைக்கும் Triple H.. விடை இதோ

மும்பை: உலகம் முழுவதும் WWE மல்யுத்த போட்டிகளுக்கு பெரும் அளவு ரசிகர்கள் இருக்கின்றார்கள். ஜான் சீனா, தி ராக், தி அண்டர்டேக்கர், ஸ்டோன் கோல்ட் போன்ற வீரர்கள் காலத்தால் அழியாத இடத்தை பிடித்திருக்கிறார்கள். ஆனால் இந்த WWE போட்டிகள் என்பது பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்ட ஒரு விளையாட்டு ஆகும்.

அதாவது உண்மையான மல்யுத்த போட்டிகள் போல் இல்லாமல் திரைக்கதை ரீதியில் முன் முடிவுகளுடன் உருவாக்கப்படும் போட்டியாகும். ஆனால் இதில் நடைபெறும் சில சண்டை காட்சிகள் உண்மையா? பொய்யா என்ற விவாதம் இன்று வரை எழுந்து வருகிறது.

WWE Unreal

சில சண்டை காட்சிகள் பார்ப்பதற்கே இது நாடகத் தன்மையுடன் இருக்கிறது என்று நமக்கு தெரிந்துவிடும். ஆனால் சில காட்சிகள் இவ்வளவு அடி விழுகிறதே இது உண்மையா?பொய்யா? வீரர்கள் பாய்ந்து வந்து குதிப்பதெல்லாம் எப்படி பொய்யாக இருக்க முடியும் என்று கேள்வியும் நம் மனதுக்குள் இல்லாமல் இல்லை.

இந்த ரகசியத்தை WWE நீண்ட நாட்களாக மூடி மறைத்து வந்து இருந்தது. தற்போது முதல் முறை இந்த wwe தொடர் எப்படி நடைபெறுகிறது. ஸ்கிரிப்ட் எப்படி எழுதப்படுகிறது. இது உண்மையாக நடத்தப்படும் நிகழ்ச்சியா? வீரர்கள் உண்மையாகவே காயம் அடைவார்களா என்பதையெல்லாம் ஒரு டாக்குமென்டரி ஆக WWE நிறுவனம் வெளியிட உள்ளது.

இதற்கு wwe unreal என பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த டாக்குமென்டரி வரும் ஜூலை 29ஆம் தேதி netflix தளத்தில் வெளியாக உள்ளது. இதற்கான ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ட்ரெய்லரின் பல முன்னணி வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். அதில் வீரர்கள் உண்மையாக காயம் அடையும் காட்சிகள் மற்றும் நாங்கள் உயிரை பணயம் வைத்து விளையாடுவதை சிலர் நாடகம் என்று கூறுகிறார்கள் போன்ற வசனங்கள் எல்லாம் இடம்பெறுகிறது.

இதில் தோன்றும் ட்ரிபிள் ஹெச் நாங்கள் செய்வது பொய் என்று சொல்கிறீர்கள். இதை பார்த்த பின்பு எங்களுடைய தொழில் மீது உங்களுக்கு மரியாதை வரும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் பல ஆண்டு காலமாக WWE குறித்து இருந்த சண்டைகள் வரும் ஜூலை 29ஆம் தேதி விடை தெரிய போகிறது.

Story first published: Friday, July 18, 2025, 15:08 [IST]
Other articles published on Jul 18, 2025
English summary
WWE Unreal Documentary is going to reveal the secrets of the wrestling business
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+