Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெறும் 2 நிமிஷம் தான்.. கோல்ட்பெர்க் கதையை முடித்த மாமிச மலை.. மிரண்டு போன WWE ரசிகர்கள்!

லாஸ் ஏஞ்சலஸ் : WWE ரெஸ்ஸில்மேனியா 36 தொடரின் இரண்டாம் பாகம் நேற்று ஒளிபரப்பானது. அதில் யுனிவெர்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

Recommended Video

Wrestlemania 36 : Goldberg vs Braun Strowman | Strowman defeated Goldberg

அந்தப் போட்டியில் சாம்பியன் கோல்ட்பெர்க்கை சந்தித்தார் பிரான் ஸ்ட்ரோமன்.

இந்தப் போட்டியில் பிரான் ஸ்ட்ரோமன் வீழ்த்த முடியாத வீரராக கருதப்பட்ட கோல்ட்பெர்க்கை இரண்டே நிமிடங்களில் வீழ்த்தி வியக்க வைத்தார்.

ரெஸ்ஸில்மேனியா 36 தொடர்

ரெஸ்ஸில்மேனியா 36 தொடர்

WWE ரெஸ்ஸில்மேனியா 36 தொடர் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருந்தும் திட்டமிட்டபடி ரசிகர்கள் இல்லாத அரங்கில் நடத்தப்பட்டது. இரண்டு நாட்களாக இந்த தொடர் ஒளிபரப்பப்பட்டது. முதல் நாள் போட்டிகள் சுவாரசியமாக அமைந்து இருந்தது.

அண்டர்டேக்கர் போட்டி

அண்டர்டேக்கர் போட்டி

குறிப்பாக, அண்டர்டேக்கர் - ஏஜே ஸ்டைல்ஸ் இடையே ஆன போன்யார்ட் போட்டி பெரும் வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் இல்லாத அரங்கில் போட்டிகளை நடத்த இருந்ததால், இந்தப் போட்டியை வெளி இடத்தில் நடத்தி, பின்னணி இசை சேர்த்து அசத்தி இருந்தது WWE.

யுனிவெர்சல் சாம்பியன்ஷிப் போட்டி

யுனிவெர்சல் சாம்பியன்ஷிப் போட்டி

முதல் நாள் ஒளிபரப்பு முடிந்த போதே, ரசிகர்கள் இரண்டாம் நாள் ஒளிபரப்பை பார்க்க ஆவலுடன் காத்திருந்தனர். அதிலும், குறிப்பாக யுனிவெர்சல் சாம்பியன்ஷிப் போட்டியை காண ஆவலுடன் காத்திருந்தனர். காரணம், கோல்ட்பெர்க்.

மீண்டும் கோல்ட்பெர்க்

மீண்டும் கோல்ட்பெர்க்

கடந்த 1990களில் WCW என்ற நிறுவனம் நடத்திய ரெஸ்லிங் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் வெற்றிகளை குவித்து வந்தவர் இந்த கோல்ட்பெர்க். அவர் பல ஆண்டுகள் கழித்து WWE-இல் இணைந்து மீண்டும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

பெரும் எதிர்பார்ப்பு

பெரும் எதிர்பார்ப்பு

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரது உறுதியான உடற்கட்டு மாறாமல் இருப்பதாலும், மிகச் சில போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்த வீரர் என்பதாலும் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு எப்போதுமே உண்டு. ரெஸ்ஸில்மேனியா 36 தொடரில் அவர் யுனிவெர்சல் சாம்பியனாக களமிறங்கினார்.

ரோமன் ரெய்ன்ஸ் விலகல்

ரோமன் ரெய்ன்ஸ் விலகல்

முதலில் ரோமன் ரெய்ன்ஸ், கோல்ட்பெர்க்குடன் மோதுவதாக இருந்தது. அவருக்கும் ரசிகர்கள் அதிகம் என்பதால் பெரும் பரபரப்பு நிலவியது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி வருவதால் முன்னெச்சரிக்கையாக அவர் போட்டியில் இருந்து விலகினார்.

மாமிச மலை ஸ்ட்ரோமன்

மாமிச மலை ஸ்ட்ரோமன்

ரோமன் ரெய்ன்ஸ் இல்லாததால், கோல்ட்பெர்க்கிற்கு இணையான உருவம் கொண்ட பிரான் ஸ்ட்ரோமனை களமிறக்கியது WWE. மாமிச மலை போன்ற உருவம் கொண்ட பிரான் ஸ்ட்ரோமன், கோல்ட்பெர்க் போடும் "ஸ்பியர்"களை தாக்குப்பிடிப்பாரா என்ற சந்தேகம் இருந்தது.

நான்கு ஸ்பியர்கள்

நான்கு ஸ்பியர்கள்

இந்த நிலையில் போட்டி துவங்கிய உடன் பிரான் ஸ்ட்ரோமன் மீது மோதி வரிசையாக நான்கு ஸ்பியர்களை போட்டார் கோல்ட்பெர்க். சாதாரணமாக நான்கு ஸ்பியர் போடப்பட்டால் எந்த வீரராலும் களத்தில் எழுந்து நிற்கவே முடியாது. ஆனாலும், ஸ்ட்ரோமன் சமாளித்து எழுந்தார்.

பவர் ஸ்லாம் தாக்குதல்

அத்துடன், பிரான் ஸ்ட்ரோமன் தொடர்ந்து நான்கு "பவர் ஸ்லாம்" போட்டு கோல்ட்பெர்க்கை நிலைகுலைய வைத்தார். அத்துடன், அவரை ‘பின்" செய்து வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இந்தப் போட்டி மொத்தமே 2 நிமிடம், 12 வினாடிகள் மட்டுமே நடைபெற்றது.

இரண்டே நிமிடம் தான்

வீழ்த்த கடினமான கோல்ட்பெர்க்கை இரண்டே நிமிடங்களில் ஸ்ட்ரோமன் வீழ்த்தியது WWE ரசிகர்களை மிரள வைத்தது. ரெஸ்ஸில்மேனியா 36 தொடரின் இரண்டாம் நாளில் இந்த போட்டி சிறப்பான போட்டியாக அமைந்தது.

Story first published: Monday, April 6, 2020, 16:52 [IST]
Other articles published on Apr 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+