Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொரோனாவுக்கு பெப்பே.. 2 நாட்கள் நடக்கும் WWE ரெஸ்ஸில்மேனியா! எப்படி பார்க்குறது? இங்க தெரிஞ்சுக்கங்க

நியூயார்க் : WWE வருடம் ஒருமுறை நடத்தும் பிரம்மாண்ட தொடரான ரெஸ்ஸில்மேனியாவை இந்த முறை கொரோனா வைரஸுக்கு மத்தியில் நடத்த உள்ளது.

Recommended Video

WWE WrestleMania 36 : Roman Reigns Replaced by Braun Strowman ?

ரெஸ்ஸில்மேனியா கடந்த சில ஆண்டுகளில் ஒரே நாளில் ஐந்து மணி நேரம் ஒளிபரப்பப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு ரசிகர்கள் அரங்கில் இருக்க முடியாது என்பதால் இரண்டு நாட்களுக்கு பிரித்து ஒளிபரப்ப உள்ளனர். இந்தியாவில் WWE ரெஸ்ஸில்மேனியா 36 நிகழ்ச்சி ஒளிபரப்பு மற்றும் எப்படி பார்ப்பது போன்ற தகவல்கள் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளன.

WWE பிடிவாதம்

WWE பிடிவாதம்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அதன் காரணமாக பல விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டு விட்டன. ஆனாலும், WWE பிடிவாதமாக தன் வாராந்திர நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. ரெஸ்ஸில்மேனியா தொடரையும் நடத்துவதில் உறுதியாக இருந்த WWE அதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது.

எங்கே நடக்கிறது இந்த நிகழ்ச்சி?

எங்கே நடக்கிறது இந்த நிகழ்ச்சி?

அமெரிக்காவில் மிக மோசமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதனால், ரசிகர்கள் முன்னிலையில் எந்த போட்டியையும் நடத்த முடியாது. அதனால், ரசிகர்கள் இல்லாமல், தன் ஒர்லாண்டோ பயிற்சி மையத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது WWE.

முன்னெச்சரிக்கை இல்லை

முன்னெச்சரிக்கை இல்லை

நியாயமாகப் பார்த்தால் வீரர்களைக் கூட வீட்டுக்கு அனுப்பி அவர்களை தனிமையில் இருக்குமாறு WWE கூறி இருக்க வேண்டும். ஆனால், அந்த முன்னெச்சரிக்கையை எல்லாம் பொருட்படுத்தாமல் ரெஸ்ஸில்மேனியா நிகழ்ச்சியையும் நடத்த உள்ளது.

இரண்டு நாட்கள், இரண்டு பகுதிகள்

இரண்டு நாட்கள், இரண்டு பகுதிகள்

ஏப்ரல் 5 மட்டுமே நடப்பதாக முன்பு திட்டமிடப்பட்டு இருந்த ரெஸ்ஸில்மேனியா 36 நிகழ்ச்சி, தற்போது ஏப்ரல் 4 மற்றும் 5 தேதிகளில் இரு பகுதிகளாக நடக்க உள்ளது. என்னென்ன முக்கிய போட்டிகள் நடக்க உள்ளது?

பிராக்லெஸ்னர், கோல்ட்பெர்க் போட்டிகள்

பிராக்லெஸ்னர், கோல்ட்பெர்க் போட்டிகள்

WWE சாம்பியன்ஷிப் - பிராக்லெஸ்னர் x ட்ரூ மேக்கின்டயர்.

யுனிவெர்சல் சாம்பியன்ஷிப் - கோல்ட்பெர்க் x ரோமன் ரெய்ன்ஸ் (இந்தப் போட்டியில் ரோமன் ரெய்ன்ஸ்-க்குப் பதில் வேறு ஒருவர் பங்கேற்க உள்ளதாக ஒரு வதந்தி உள்ளது).

அண்டர்டேக்கர், ஜான் சீனா போட்டி

அண்டர்டேக்கர், ஜான் சீனா போட்டி

ஃபயர்பிளை ஃபன் ஹவுஸ் போட்டி - ஜான் சீனா x "தி பியன்ட்" பிரே வியாட்

போன்யார்ட் போட்டி - அண்டர்டேக்கர் x ஏஜே ஸ்டைல்ஸ்

லாஸ்ட் மேன் ஸ்டான்டிங் - எட்ஜ் x ரான்டி ஆர்ட்டன்

இன்டர்காண்டினண்டல் சாம்பியன்ஷிப் - சாமி சைன் x டேனியல் பிரையன்

பிற முக்கிய போட்டிகள்

பிற முக்கிய போட்டிகள்

முக்கிய நட்சத்திர வீரர்களின் போட்டிகள் - கெவின் ஓவன்ஸ் x செத் ரோலின்ஸ், அலிஸ்டர் பிளாக் x பாபி லாஷ்லி, எலியாஸ் x கிங் கார்பின், ஓடிஸ் x டால்ப் ஜிக்லர். இது தவிர ரா, ஸ்மேக்டவுன், என்எக்ஸ்டி ஆகியவற்றின் மூன்று மகளிர் சாம்பியன்ஷிப் போட்டிகள், மூன்று டேக் டீம் போட்டிகளும் நடைபெற உள்ளது.

ஒளிபரப்பு நேரம்

ஒளிபரப்பு நேரம்

WWE ரெஸ்ஸில்மேனியா 36 நிகழ்ச்சி இந்தியாவில் வரும் ஏப்ரல் 4 மற்றும் 5 என இரண்டு நாட்களில், இரண்டு பகுதிகளாக ஒளிபரப்பாகும். இரண்டு நாட்களிலும் ஒளிபரப்பு இரவு 10.30 மணிக்கு தொலைக்காட்சி மற்றும் ஸ்ட்ரீமிங்கில் துவங்கும்.

எந்த சேனலில் பார்க்கலாம்?

எந்த சேனலில் பார்க்கலாம்?

இந்தியாவில் சோனி டென் 1 மற்றும் சோனி டென் 1 HD சேனல்களில் ஆங்கிலத்திலும், சோனி டென் 3, சோனி டென் 3 HD சேனல்களில் இந்தியிலும் இந்த நிகழ்ச்சியை காணலாம். WWE நெட்வொர்க் எனும் ஆப் மூலம் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவி, கன்சோல் ஆகியவற்றில் ஸ்ட்ரீமிங் மூலம் காணலாம்.

அதிக பார்வையாளர்கள்

அதிக பார்வையாளர்கள்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்கள் லாக்டவுன் நேரத்தில் இருப்பதால் இந்த ஆண்டு ரெஸ்ஸில்மேனியா தொடரை அதிக மக்கள் பார்ப்பார்கள் என WWE எதிர்பார்த்து உள்ளது. நம் ஊரில் 90'ஸ் கிட்ஸ் நிறைய பேர் இந்த நிகழ்ச்சியை பார்க்கக் கூடும்.

Story first published: Wednesday, April 1, 2020, 17:20 [IST]
Other articles published on Apr 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+