Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மனைவியை பற்றி பேசிய ஏஜே ஸ்டைல்ஸ்.. மண்ணோடு மண்ணாக புதைத்த அண்டர்டேக்கர்.. வாயை பிளந்த WWE ரசிகர்கள்!

லாஸ் ஏஞ்சலஸ் : WWE ரெஸ்ஸில்மேனியா 36 நிகழ்ச்சியில் அண்டர்டேக்கர் - ஏஜே ஸ்டைல்ஸ் இடையே ஆன "போன்யார்ட்" போட்டி இதுவரை ரெஸ்லிங் வீரர்கள் கண்டிராத போட்டியாக அமைந்தது.

தரைப்பரப்பில் நடந்த இந்த போட்டி, சினிமாவைப் போலவே படமாக்கப்பட்டு, பின்னணி இசை சேர்க்கப்பட்டு, வேற லெவல் அனுபவத்தை ரெஸ்லிங் ரசிகர்களுக்கு அளித்தது.

போட்டி முடிவில் அண்டர்டேக்கர், ஏஜே ஸ்டைல்ஸ்-ஐ உயிரோடு மண்ணில் புதைத்தார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் அண்டர்டேக்கர் "அமெரிக்கன் பேட்ஏஸ்" தோற்றத்தில் இந்த போட்டியில் பங்கேற்றது தான்.

ரெஸ்ஸில்மேனியா தொடர்

ரெஸ்ஸில்மேனியா தொடர்

2020ஆம் ஆண்டின் ரெஸ்ஸில்மேனியா தொடர் ஏப்ரல் 5 அன்று நடைபெற இருந்தது. இதன் இடையே கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவியதை அடுத்து ரசிகர்கள் இல்லாமல் அனைத்து ரெஸ்லிங் போட்டிகளையும் நடத்தி வந்தது WWE.

போட்டிகள் பதிவு

போட்டிகள் பதிவு

ரெஸ்ஸில்மேனியா தொடரையும் அதே போல ரசிகர்கள் இல்லாமல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ரசிகர்கள் இல்லாத அரங்கில் தான் போட்டிகள் நடைபெறும் என்பதால் WWE அனைத்து போட்டிகளையும் முன்பே பதிவு செய்து வைத்துக் கொண்டது.

போன்யார்ட் போட்டி

போன்யார்ட் போட்டி

அந்த வகையில் அண்டர்டேக்கர் - ஏஜே ஸ்டைல்ஸ் மோதிய போன்யார்ட் போட்டியையும் முன்பே பதிவு செய்து வைத்து, அதில் பின்னணி இசை சேர்த்து சினிமா சண்டைக் காட்சி போல ஒளிபரப்பியது. இது ரெஸ்லிங் ரசிகர்கள் இதுவரை கண்டிராத அனுபவமாக இருந்தது.

ஏஜே ஸ்டைல்ஸ் ஓவர் பேச்சு

ஏஜே ஸ்டைல்ஸ் ஓவர் பேச்சு

மேலும், போட்டியும் ரணகளமாக இருந்தது. ஏஜே ஸ்டைல்ஸ், முன்னதாக அண்டர்டேக்கர் வயதானவராக மாறி விட்டார். முந்தைய வேகம் இல்லை. அவரது மனைவி மிச்சேல் மெக்கூல் அவரை மாற்றி விட்டார் என்றெல்லாம் வம்பிழுத்து இருந்தார். அவரது மனைவி பற்றியும் அவதூறாக பேசி இருந்தார்.

சுடுகாட்டில் சண்டை

இந்த நிலையில், போன்யார்ட் போட்டியில் தன்னுடன் மோதுமாறு அண்டர்டேக்கரை அழைத்தார் ஏஜே ஸ்டைல்ஸ். அதன்படி சுடுகாடு போன்ற ஒரு பகுதியில் (செட் போடப்பட்டு) இந்த போட்டி நடந்தது. ஏஜே ஸ்டைல்ஸ் முன்னதாக வந்து விட, அண்டர்டேக்கர் வரவை அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.

புல்லட்டில் என்ட்ரி

அண்டர்டேக்கர் அமெரிக்கன் பேட்ஏஸ் தோற்றத்தில், தன் புல்லட்டில் அதிரடி என்ட்ரி கொடுத்தார். ரிங்கில் நடக்காமல், வெளியில் போட்டி நடத்தப்பட்டதால் இது அனைத்துமே பல ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

வித்தை காட்டுவார்

வித்தை காட்டுவார்

இந்தப் போட்டியின் விதிப்படி எந்த வீரர், மற்ற வீரர் குழியில் தள்ளி மண்ணைப் போட்டு மூடுகிராரோ அவர் வெற்றியாளர். ஏற்கனவே, அண்டர்டேக்கர் பல போட்டிகளில் இது போல விளையாடி, அதில் பல வித்தைகளை காட்டி இருந்ததால், இந்தப் போட்டியிலும் வித்தை காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இரண்டு ரெஸ்லிங் வீரர்கள்

இரண்டு ரெஸ்லிங் வீரர்கள்

இந்தப் போட்டியில் அண்டர்டேக்கரை சமாளிக்க ஏஜே ஸ்டைல்ஸ் இரண்டு ரெஸ்லிங் வீரர்களை அழைத்து வந்திருந்தார். போட்டியின் ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் குறுக்கிட்டு, அண்டர்டேக்கரிடம் செமயாக வாங்கிக் கட்டிக் கொண்டனர்.

பயமுறுத்திய அண்டர்டேக்கர்

ஒரு சமயம், அண்டர்டேக்கரை குழிக்குள் தள்ளி விட்டு மண்ணை போட்டு மூட தயாரானார் ஏஜே ஸ்டைல்ஸ், அப்போது குழிக்குள் இருந்த அண்டர்டேக்கர், சடாரென ஸ்டைல்ஸ்-இன் பின் தோன்றி வித்தை காட்டி பயமுறுத்தினார்.

மண்ணைப் போட்டு மூடினார்

மண்ணைப் போட்டு மூடினார்

அடுத்து ஒரு கட்டத்தில் அண்டர்டேக்கர் கை ஓங்கவே, ஏஜே ஸ்டைல்ஸிடம் "நீதானே இந்த மாதிரி போட்டி வேணும்னு கேட்ட" என கூறிக் கொண்டே சுமார் 15 - 20 அடி உயரத்தில் இருந்து அவரை கீழே வீசினார். அதன் பின் அண்டர்டேக்கரை புதைக்க, ஏஜே ஸ்டைல்ஸ் தோண்டி வைத்திருந்த குழியில், நோகாமல் ஸ்டைல்ஸ்-ஐ தள்ளி, மண்ணைப் போட்டு மூடினார் அண்டர்டேக்கர்.

ரசிகர்கள் வியப்பு

இந்த போட்டி டிராமாதான் என்றாலும், எடுக்கப்பட்ட விதம் அருமையாக இருந்தது. குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய ரெஸ்லிங் ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாக இருந்தது. அவர்கள் இந்த போட்டி குறித்து இணையத்தில் தங்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Story first published: Sunday, April 5, 2020, 15:30 [IST]
Other articles published on Apr 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+