Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அண்டர்டேக்கரின் கடைசி போட்டி.. இனிமே இப்படி பார்க்கவே முடியாது.. WWE மெகா திட்டம்.. கசிந்த தகவல்!

நியூயார்க் : WWE ரெஸ்ஸில்மேனியா 36 நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது. அது தான் அண்டர்டேக்கரின் கடைசி நிகழ்வாக இருக்கும் என ஒரு தகவல் கூறப்படுகிறது.

Recommended Video

WWE Wrestlemania 36 | Undertaker may appear as American Badass

அண்டர்டேக்கர் ஏற்கனவே வயதான நிலையில், அதிக போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவரால் போட்டிகளில் தன் முந்தைய வேகத்தை காட்ட முடியவில்லை.

எனவே, அவரது கடைசி போட்டியை ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் நடத்த WWE திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அண்டர்டேக்கர் போட்டிகள்

அண்டர்டேக்கர் போட்டிகள்

90களை சேர்ந்த WWE ரசிகர்கள் பலருக்கு அண்டர்டேக்கர் என்றால் லேசான பயம் ஏற்படும். காரணம். அந்த அளவுக்கு பயத்தை கிளப்பும் வகையில் அவரை "டெட்மேன்" என்ற பாத்திரத்தில் காட்டி வந்தது WWE. அவர் இறந்து விட்டு, பின் மீண்டும் உயிரோடு வந்து இருப்பதாக அவருக்கு கட்டுக்கதைகள் கூறப்படுவதுண்டு.

அமெரிக்கன் பேட்ஏஸ்

அமெரிக்கன் பேட்ஏஸ்

2000த்தின் துவக்கத்தில் அமெரிக்கன் பேட்ஏஸ் என்ற ரௌடி கதாபாத்திரத்துக்கு மாறினார் அண்டர்டேக்கர். அது அவருக்கு மிகப் பெரும் ரசிகர் கூட்டத்தை உண்டாக்கியது. அவர் புல்லட்டில் அரங்கத்தின் உள்ளே வரும் போது பெரும் ஆரவாரம் எழும்.

பிராக்லெஸ்னர் முடித்து வைத்தார்

பிராக்லெஸ்னர் முடித்து வைத்தார்

ரெஸ்ஸில்மேனியாவில் நீண்ட காலம் தோல்வி அடையாமல் இருந்த அண்டர்டேக்கர், சில ஆண்டுகளுக்கு முன் பிராக்லெஸ்னரால் மோசமாக வீழ்த்தப்பட்டார். அத்தோடு அண்டர்டேக்கர் இனி ரெஸ்லிங் போட்டிகளில் விளையாட மாட்டார் என கருதப்பட்டது.

முக்கிய போட்டிகள்

முக்கிய போட்டிகள்

ஆனால், அண்டர்டேக்கர் தொடர்ந்து முக்கிய போட்டிகளில் மட்டும் ஆடி வருகிறார். வரும் ஏப்ரல் 6 அன்று நடைபெற உள்ள ரெஸ்ஸில்மேனியா நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், அதற்குரிய வேலைகளை அவர் தொடங்கி விட்டார்.

ஏஜே ஸ்டைல்ஸ்

ஏஜே ஸ்டைல்ஸ்

சூப்பர் ஷோடவுன் நிகழ்ச்சியில் ஏஜே ஸ்டைல்ஸ் உடன் மல்லுக் கட்டிய அண்டர்டேக்கர் அவரை வீழ்த்தி டுவைக் ட்ராபியை வென்றார். அப்போது முதல் இருவரும் மன்டே நைட் ரா நிகழ்ச்சியில் அடிக்கடி வார்த்தைப் போரில் ஈடுபட்டு வந்தனர்.

ஸ்டைல்ஸ் வம்பிழுத்தார்

ஸ்டைல்ஸ் வம்பிழுத்தார்

சமீபத்தில் ஏஜே ஸ்டைல்ஸ் மன்டே நைட் ரா நிகழ்ச்சியில் அண்டர்டேக்கரை எல்லை மீறி சீண்டினார். அவரின் அமெரிக்கன் பேட்ஏஸ் பாத்திரம் பற்றி திடீரென பேசிய ஏஜே ஸ்டைல்ஸ், அவர் என் முன் வருவாரா? என்பது போல பேசினார்.

அமெரிக்கன் பேட்ஏஸ் மாற்றம்

அமெரிக்கன் பேட்ஏஸ் மாற்றம்

ஏஜே ஸ்டைல்ஸ் திடீரென இப்படி பேசியதை அடுத்து அவர் விரைவில் அமெரிக்கன் பேட்ஏஸ் கதாபாத்திரத்தில் தோன்ற இருப்பதாக பரபரப்பு கிளம்பியது. ரசிகர்கள் அது குறித்து இணையத்தில் பேசி வருகின்றனர். ஆனால், WWE இதுபற்றி ஏதும் அறிவிக்கவில்லை.

கடைசி போட்டியா?

கடைசி போட்டியா?

ரெஸ்ஸில்மேனியாவில் திடீரென அண்டர்டேக்கர் ரௌடி போல தோன்றுவார் எனவும் சிலர் கூறி வருகின்றனர். இத்தனை பில்டப்களும் அண்டர்டேக்கரின் கடைசி போட்டிக்காக தான் என்றும் ஒரு கிசுகிசு எழுந்துள்ளது. அதற்கேற்ப WWE ஒரு முக்கிய வேலையை செய்துள்ளது.

ட்ரேட்மார்க் வாங்கும் WWE

ட்ரேட்மார்க் வாங்கும் WWE

அண்டர்டேக்கரின் புனைப் பெயர்களான "தி டெட்மேன்" மற்றும் "தி ஃபீனாம்" ஆகிய இரண்டு பெயர்களுக்கும் ட்ரேட்மார்க் கோரி உள்ளது WWE. அண்டர்டேக்கரின் அந்த கதாபாத்திரம் மாற்றப்பட உள்ளதையும், அவர் தன் கடைசி போட்டியில் ஆட இருப்பதையும் தான் இது குறிக்கிறது என சில ரசிகர்கள் கூறி உள்ளனர்.

Story first published: Wednesday, March 11, 2020, 19:39 [IST]
Other articles published on Mar 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+