For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

90ஸ் கிட்ஸ் கண் கலங்குதே.. அசால்ட்டாக ஓய்வை அறிவித்த WWE வீரர் “தி ராக்”.. ரசிகர்கள் ஷாக்!

90ஸ் கிட்ஸ் கண் கலங்குதே.. அசால்ட்டாக ஓய்வை அறிவித்த WWE வீரர் "தி ராக்".. ரசிகர்கள் ஷாக்!

நியூயார்க் : பிரபல WWE வீரர் தி ராக் என அழைக்கப்படும் டிவைன் ஜான்சன் ரெஸ்லிங்கில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக ஒரு பேட்டிக்கு நடுவே அசால்ட்டாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

90-களில் ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் தினமும் பேசப்படும் ஒரு நபராக இருந்தார் தி ராக். அந்த அளவு WWE ரெஸ்லிங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்தார்.

ராக் தான் ஆரம்பம்

ராக் தான் ஆரம்பம்

ராக் தான் ஆரம்பம் இந்தியாவில் WWE பற்றி பேசும் பலர், முதன் முதலில் ராக்கை பார்த்து தான் WWE பார்க்கவே தொடங்கி இருப்பார்கள். கடந்த 15 ஆண்டுகளில் ராக் விரல் விட்டு எண்ணக் கூடிய போட்டிகளில் தான் ஆடி இருக்கிறார். இந்த நிலையில், ராக் ரெஸ்லிங்கில் ஓய்வை அறிவித்தது WWE ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஓய்வை அறிவித்தார்

ஓய்வை அறிவித்தார்

"பாஸ்ட் அண்ட் பியூரியஸ் : ஹாப்ஸ் அண்ட் ஷா" எனும் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ள ராக், அது குறித்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேட்டி அளித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவரது ரெஸ்லிங் வாழ்க்கை குறித்த பேச்சு எழுந்தது. அப்போது அவர் நான் அமைதியாக ரெஸ்லிங்கில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். ஏனெனில், எனக்கு அற்புதமான ரெஸ்லிங் வாய்ப்பு கிடைத்தது" என்று குறிப்பிட்டார்.

ஹாலிவுட்டில் பிஸி

ஹாலிவுட்டில் பிஸி

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே WWE-ஐ விட்டு பிரிந்த டிவைன் ஜான்சன் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்தார். அதில் படிப்படியாக முன்னேறிய அவர் இன்று ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற நிலையை எட்டி உள்ளார்.

எப்படி வளர்ந்தார்?

எப்படி வளர்ந்தார்?

WWEஇல் ராக் மிக வேகமாக வளர்ந்தார். இவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. பிரபல ரெஸ்லிங் வீரர் ராக்கி ஜான்சனின் மகன் என்பதால் எளிதாக உள்ளே நுழைந்தார். ஆனால், மற்ற வீரர்களுக்கு இடையே தன்னை தனித்து காட்டிக் கொள்ள உடலை வலுவாக வைத்துக் கொண்டதோடு, பேச்சிலும் கலக்கினார்.

பலே கில்லாடி

பலே கில்லாடி

ராக்குக்கு இருக்கும் ரசிகர்களில் பெரும்பாலானோர் அவரது வித்தியாசமான பேச்சை கேட்கவே ரசிகர்களாக மாறி இருப்பார்கள். தன் பேச்சு மற்றும் சில ரெஸ்லிங் அசைவுகளை வைத்து முன்னணி வீரராக வலம் வந்தார்.

மக்கள் சாம்பியன்

மக்கள் சாம்பியன்

நாமெல்லாம் இப்போது தான் மக்கள் முதல்வர் என்பதை கேள்விப்பட்டு இருக்கிறோம். அண்ணன் ராக் அப்பவே கில்லாடி. தான் சாம்பியன் பட்டத்தை இழக்கும் போதெல்லாம் தன்னை தானே "மக்கள் சாம்பியன்" என கூறி, அதை தன் பேச்சின் மூலம் ரசிகர்களை நம்ப வைத்தார்.

சீனாவுடன் மோதல்

சீனாவுடன் மோதல்

நீண்ட காலமாக WWE பக்கம் தலை காட்டாமல் இருந்த ராக் சில ஆண்டுகள் முன்பு மற்றொரு பிரபல வீரர் ஜான் சீனாவை வம்பிழுத்து (எல்லாம் டிராமா தாங்க!) அவருடன் சண்டை போட்டார். அடுத்த ஆண்டும், அவருடன் மோதினார்.

கடைசி போட்டி

கடைசி போட்டி

ரெஸ்ஸில்மேனியா 32இல் தன் கடைசி போட்டியை ஆடினார். அந்தப் போட்டியில் வியாட் பிரதர்ஸ் எனும் கிறுக்கு கும்பலுடன் மோதி வெற்றி பெற்றார். அதுவும் வெறும் ஆறு நொடியில் வெற்றி பெற்றார். அது தான் அவரது கடைசி போட்டி என யாருக்கும் தெரியாது. தற்போது தன் ஓய்வை போகிற போக்கில் கூறி, அதை தன் கடைசி போட்டியாக மாற்றி இருக்கிறார் ராக்.

Story first published: Monday, August 5, 2019, 18:53 [IST]
Other articles published on Aug 5, 2019
English summary
WWE wrestler Dwayne “The Rock” Johnson announced retirement from pro wrestling
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+