Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன தம்பி டயர்டா இருக்கா.. பாத்துக்கலாம் விடு... ரிஷப் பந்த்தை வம்பிழுத்த சஹல்

மும்பை : விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த்தின் பழைய வொர்க் அவுட் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள யுஸ்வேந்திர சஹல் அவரை வம்பிழுத்துள்ளார்.

Recommended Video

IPL 2020 could be held in Mumbai

அந்த வீடியோவில் பாக்சிங் பயிற்சி செய்யும் பந்த்தை போல தானும் காமெடியாக செய்கிறார் சஹல்.

தற்போது இந்த வீடியோவை வெளியிட்டுள்ள சஹல், என்ன தம்பி டயர்டா இருக்கா என்று கேட்டு வம்பிழுத்துள்ளார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் ஏராளமான லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் பதிவு செய்துள்ளனர்.

வீரர்களுக்கு கைகொடுத்த சமூகவலைதளங்கள்

வீரர்களுக்கு கைகொடுத்த சமூகவலைதளங்கள்

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதியிலிருந்து சர்வதேச அளவிலும் இந்தியாவிலும் கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர். ஐபிஎல் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு கைகொடுத்தது என்னவோ சமூக வலைதளங்கள் மட்டுமே.

லெக் ஸ்பின்னர் சஹல்

லெக் ஸ்பின்னர் சஹல்

கடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இரண்டு போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்ற இந்திய லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹலும் தன்னுடைய வீட்டில் முடங்கிய நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது டிக்டாக் வீடியோக்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளினார். தற்போது டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவரும் வேறு பக்கம் தாவி விட்டார்.

பந்த்தை வம்பிழுத்த சஹல்

பந்த்தை வம்பிழுத்த சஹல்

இந்நிலையில், இந்திய அணியின் வலிமை மற்றும் சீரமைப்பு கோச் நிக் வெப்புடன் ரிஷப் பந்த் பாக்சிங் பயிற்சி மேற்கொள்ளும் பழைய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சஹல். அந்த வீடியோவில், பந்த்தை கலாய்க்கும்வகையில், தானும் சேர்ந்து பயிற்சி செய்வது போல காமெடி செய்கிறார். மேலும் இந்த வீடியோ பதிவில், என்ன தம்பி டயர்டா இருக்கா என்று கேட்டு வம்பிழுத்துள்ளார் சஹல்.

காமெடி வீரர்

காமெடி வீரர்

இந்த வீடியோவிற்கு ஏராளமான லைக்குகளை அளித்துள்ள ரசிகர்கள், சஹலை கலாய்த்துள்ளனர். அவர் ஒரு சிரிப்பு வீரர் என்றும் எப்போதும் எல்லாரையும் சந்தோஷமாக வைத்து கொள்வதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ரிஷப் பந்த்தின் டெல்லி கேபிடல்ஸ் அணியின் சக வீரர் ஹர்சல் படேலும் கலாய்த்துள்ளார்.

Story first published: Thursday, July 2, 2020, 11:26 [IST]
Other articles published on Jul 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+