பெண்களுக்கு சூப்பரான அறிவிப்பு.. மாதம் ரூ.25,000 கொடுக்கும் தமிழக அரசு.. இலவச பயிற்சி.. முழு விவரம்!

By Vignesh Selvaraj

சென்னை: மாதம் ரூபாய் 25,000 சம்பளம் பெறும் வகையில் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. 3 மாதங்களுக்கு இலவச பயிற்சியுடன், தங்கும் இடம், போக்குவரத்து வசதிகளும் வழங்கப்படுகிறது. தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சிகளை வழங்குகிறது.

தமிழக அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக பல்வேறு திட்டங்களை, பயிற்சிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, தாட்கோ மூலம் பல்வேறு துறைகளில் திறன் அடிப்படையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.


tn government jobs employment

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக இளைஞர்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு துறைகளில் பயிற்சி வகுப்புகளை வழங்குவதோடு, வேலைவாய்ப்பும் வழங்குகிறது. ஏஐ, டெக்னாலஜி, ஹோட்டல் மேனேஜ்மெண்ட், டிசைனிங், பேஷன், பேக்கிங் உள்ளிட்ட துறைகளில் பயிற்சி வகுப்புகளும், வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை (Cosmetology, Aesthetic Training And Dermaplaining Tranining Courses) பயிற்சிகளை வழங்குகிறது.

இந்த பயிற்சி 90 நாட்கள் நடைபெற உள்ளது. ராணிப்பேட்டை, கோவை மாவட்டத்தில் தாட்கோ மூலம் அழகுக்கலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. பயிற்சிக்கு செல்பவர்கள் தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட செலவுகள் தாட்கோ மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாட்கோவின் இலவச அழகுக்கலை பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும். மேலும், 18 வயது 35 வயது வரை இருக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த ஒரு கல்வித்தகுதியும் கிடையாது.

அழகுக்கலை என்பது இன்றைய காலத்தில் முக்கிய தொழிலாக கருதப்படுகிறது. இதன் மூலம், பிரபல பார்லர்களில் வேலை செய்வதோடு, மட்டுமில்லாமல் சொந்தமாக தொழில் தொடங்கலாம். நம் ஊரில் மட்டுமில்லாமல், சர்வதே அளவிலும் அழகுக்கலை துறையில் வேலை பார்க்கலாம். இந்த துறையின் மூலமும் கைநிறைய சம்பளமும் பெறலாம்.

இந்த நிலையில், அழகுக்கலை பயிற்சியை தமிழக அரசு வழங்குகிறது. இந்த பயிற்சி முடிந்தவுடன் தகுதியானவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு, அந்த நிறுவனத்தின் சார்பாக வேலைவாய்ப்பும் கிடைக்கும். உங்களை தேர்வு செய்யும் நிறுவனம் மூலம் மாதம் ஊதியமாக வழங்கப்படும். மாதம் ரூ.18,000 முதல் ரூ.25,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழகுக்கலை பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் tahdco.Com என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். சுய தொழில் செய்ய ஆர்வமுள்ள பெண்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து, வேலைகளை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Credit: Oneindia

English summary
Free training is provided with a salary of Rs. 25,000 per month. Along with free training for 3 months, accommodation and transportation facilities are also provided. TAHDCO and a private company jointly provide makeup and cosmetology training to Adi Dravidian and tribal youths.
Story first published: Wednesday, February 18, 2026, 9:55 [IST]
Other articles published on Feb 18, 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+