ஒரே நொடி.. அதிமுக மாஜி அமைச்சர் இருந்த மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு! திருச்சியில் குழப்பம்

By Vigneshkumar

திருச்சி: அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாஜி அமைச்சர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாகத் திடீரென மேடை சரிந்து விழுந்தது. மாஜி அமைச்சர் உள்ளிட்டோர் இருந்தபோது எதிர்பாராத விதமாக மேடை சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறது. ஒரு பக்கம் கூட்டணி கணக்கு மற்றொரு பக்கம் பிரச்சாரம் என்றே அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன..


admk tamil nadu

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் மாநிலம் முழுக்க பிரச்சாரக் கூட்டங்கள் நடந்து வருகிறது. அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடர்ச்சியாகப் பிரச்சாரங்களில் கலந்து கொண்டு வருகிறார்கள். அதன்படி அதிமுக சார்பில் திருச்சியில் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் முன்னாள் அமைச்சர் சரோஜா கலந்து கொண்டார். பொதுமக்களும் அதிகளவில் பங்கேற்றிருந்தனர்.

அப்போது மேடையில் அனைத்து நிர்வாகிகளும் வந்துவிட்ட நிலையில், சரோஜாவும் மேடையில் அமர்ந்திருந்தார். நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், அப்போது யாரும் எதிர்பாராத விதமாகச் சட்டென மேடை சரிந்து விழுந்தது. அதிகப் பேர் மேடையில் ஏறியதால் மேடை சரிந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் சரோஜா உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்து இருக்கிறார்கள். அப்போது சட்டென எதிர்பாராத விதமாக மேடை சரிந்து விழுகிறது. இதனால் அங்கிருந்தவர்கள் பதறி போனார்கள். இவை அனைத்தும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகி இருக்கிறது. இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், நல்வாய்ப்பாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. மேடை சரிந்து விழும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.


admk tamil nadu

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த முறை நான்கு முனைப் போட்டி ஏற்படும் என்றே தெரிகிறது. ஒரு பக்கம் திமுக கூட்டணி, இன்னொரு பக்கம் அதிமுக கூட்டணி இருக்கிறது. நாம் தமிழர் சீமான் வழக்கம் போலத் தனித்தே களமிறங்குகிறார். இது தவிர விஜய்யின் தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் திமுக கூட்டணியில் இதுவரை சலசலப்பு இல்லாமல் இருந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் இப்போது அதிருப்தியை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது. அக்கட்சியில் சிலர் தவெக உடன் கூட்டணி அமைக்க விரும்புவதாகத் தெரிகிறது. இதனால் திமுக கூட்டணியில் ஒரு மாற்றம் உருவாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை அவர்கள் கடந்தாண்டே பாஜக உடன் கூட்டணியை உறுதி செய்துவிட்டனர். அன்புமணி தலைமையிலான பாமகவும் அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டது. இது தவிர வேறு சில கட்சிகளும் இந்தக் கூட்டணியில் இணையலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.

Credit: Oneindia

English summary
Shocking moment at AIADMK event as Stage suddenly collapses (அதிமுக மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு): Former minister Saroja stage collagpes in Trichy.
Story first published: Tuesday, January 20, 2026, 7:14 [IST]
Other articles published on Jan 20, 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+