ரோலர் கோஸ்டர் மோடில் தங்கம், வெள்ளி விலை: இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

By Devika Manivannan

சென்னையில் தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதும் என ரோலர் கோஸ்டர் மோடில் இருக்கிறது. உலக சந்தையில் நிகழும் மாற்றங்களே இதற்கு முக்கிய காரணம். சென்னையில் நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று சரிந்துள்ளது.

தங்கம், வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கமாகவே காணப்படுகின்றன. ஒரு நாள் விலை ஏறுவது , ஒரு நாள் விலை சரிவது என விலைபோக்கை நம்மால் கணிக்கவே முடியவில்லை. வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையான நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு 230 ரூபாய் உயர்வு கண்ட நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை தடாலடியாக சரிந்திருக்கிறது.


Gold silver investment

நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14,650 ரூபாய்க்கு விற்பனையானது ஒரு சவரன் தங்கம்1, 17,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 14,580 ரூபாய்க்கு விற்கப்படுகிறது அதாவது தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 70 ரூபாய் சரிந்திருக்கிறது. ஒரு சவரன் என பார்க்கும்போது 560 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. சென்னை பொறுத்தவரை இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,16,640 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இன்று ரூ.10 லட்சத்திற்கு தங்கம் வாங்கினால் 2030இல் அதன் மதிப்பு எவ்வளவாக உயர்ந்திருக்கும்?

24 கேரட் தங்கத்தை பொருத்தவரை இன்றைய தினம் கிராமுக்கு 76 ரூபாய் விலை குறைந்து 15,906 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 608 ரூபாய் விலை குறைந்து 1, 27,248 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் மட்டும் இன்று விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 12,530 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 80 ரூபாய் விலை உயர்ந்து 1,00,240 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

இனி தங்கம் விலை உயர்வை யாராலும் தடுக்க முடியாது: வேலையை காட்ட தொடங்கியது சீனா!!

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை கிராம் 300 ரூபாய்க்கும் ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை தன்னுடைய வரலாற்று உச்சமான 4.25 லட்சத்தில் இருந்து வேகமாக சரிந்து வந்து 2.80 லட்சம் முதல் 3 லட்சம் வரை என்ற விலைக்குள்ளேயே ஏறி இறங்கி வருகிறது.

தங்கம், வெள்ளி ஆகிய இரண்டுமே இப்போது ஏற்ற இறக்க நிலையில் தான் இருக்கின்றன. புவிசார் மோதல்கள் . வர்த்தக மோதல்கள் ஏற்பட்டால் மீண்டும் இவை இரண்டும் உயர கூடும், இல்லை என்றால் சில காலத்திற்கு பெரிய அளவில் விலை ஏறாமல் இதே போல ஏற்ற இறக்கத்துடன் தான் காணப்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

Credit: Goodreturns

English summary
Gold rate declined today and silver rate remain steady. Now both gold and silver are in heavy volatile stage. Here is what investors should do now.
Story first published: Tuesday, February 10, 2026, 10:01 [IST]
Other articles published on Feb 10, 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+