எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் வைத்திலிங்கம்.. ஓபிஎஸ்-ஐயும் சேர்த்து இனி 2 பேர் மட்டும்தான்!

By Vignesh Selvaraj

சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளார் வைத்திலிங்கம். அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இன்று அண்ணா அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார்.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் அவரையும் சேர்த்து 4 எம்.எல்.ஏக்கள் இருந்த நிலையில், மனோஜ் பாண்டியன் அண்மையில் திமுகவில் இணைந்தார். அப்போது அவரது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு எம்.எல்.ஏவுமான வைத்திலிங்கம் இன்று எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் ஓபிஎஸ் அணியில் அவரையும் சேர்த்து மொத்தம் 2 பேர் மட்டுமே எம்.எல்.ஏ.க்கள்.


vaithilingam o panneerselvam dmk

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பதவி வகித்து வரும் வைத்திலிங்கம், அதிமுகவில் அமைச்சராக இருந்தவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக வலம் வந்தவர். கடந்த 2022இல் அதிமுக ஒற்றை தலைமை தொடர்பான பிரச்சனை எழுந்த போது ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தார். அதன் பின்னர் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இணை ஓருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை நடத்தி வருகிறார். அதன் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் செயல்பட்டார். கடந்த நவம்பர் மாத இறுதியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவானது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக மாறி இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் பேசுகையில், "மூன்றரை வருடமாக அதிமுக கட்சி ஒன்றிணைய வேண்டும் என்று அமைதியாக அமைதி புரட்சி நடத்திக் கொண்டிருந்தார் ஓபிஎஸ். இன்னும் ஒரு மாதத்தில் கட்சி ஒன்றிணையவில்லை என்றால் ஒரு வியூகத்தை அமைத்து, ஓபிஎஸ் தலைமையிலான உரிமை மீட்பு குழு, கட்சியாக மாறி மாபெரும் வெற்றியை பெறும். இன்னும் ஒரு மாதத்தில் நாம் வெற்றியை நோக்கி செல்வோம்" எனப் பேசியிருந்தார்.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் வைத்திலிங்கம் இன்று காலை திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க.விற்கு சென்றது போன்றே, வைத்திலிங்கமும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைய உள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் அவரையும் சேர்த்து 4 எம்.எல்.ஏக்கள் இருந்த நிலையில், மனோஜ் பாண்டியன் அண்மையில் திமுகவில் இணைந்தார். அப்போது அவரது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு எம்.எல்.ஏவுமான வைத்திலிங்கம் இன்று எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். சற்று நேரத்தில் திமுகவில் இணைய இருக்கிறார்.

இதனால் ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ எண்ணிக்கை குறைகிறது. இனி. ஓபிஎஸ்ஸையும் சேர்த்து மொத்தம் 2 பேர் மட்டுமே அவரது அணியில் எம்.எல்.ஏ.க்கள். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன் ஆகியோர் மட்டுமே அவரது அணியில் எம்.எல்.ஏக்கள்.

Credit: Oneindia

English summary
While the OPS faction had four MLAs, including himself, Manoj Pandian recently joined the DMK. At that time, he resigned from his MLA post. Now, former minister and Orathanadu MLA Vaithilingam is joining DMK today. As a result, the OPS faction is left with only two MLAs, including himself.
Story first published: Wednesday, January 21, 2026, 8:14 [IST]
Other articles published on Jan 21, 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+