ரெடியா இருங்க! தங்கத்தில் இதுவரை கண்டிராத மாபெரும் விலை ஏற்றம் வரப்போகுது.. அதிர வைத்த புது கணிப்பு

By Shyamsundar I

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் விலை ஏற்றம் காத்திருப்பதாக உலகளாவிய சந்தை ஆய்வு நிறுவனமான குளோபல் டேட்டா (GlobalData) எச்சரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் இந்த வருட இறுதியில் நடக்கலாம்.. அது மிக பெரிய ஏற்றமாக இருக்கும் என்று எச்சரித்து உள்ளனர்.

சர்வதேச சந்தையில் நிலவும் அசாதாரண சூழல்களால், தங்கம் மற்றும் வெள்ளிக்கான விலைக் கணிப்பை அந்த நிறுவனம் தற்போது பல மடங்கு உயர்த்தியுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் புதிய இலக்குகள் குளோபல் டேட்டாவின் சமீபத்திய அறிக்கையின்படி, 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போதைய நிலையில் இருந்து 45% முதல் 135% வரை உயர வாய்ப்புள்ளது.தங்கம் (சர்வதேச சந்தை): ஒரு அவுன்ஸ் தங்கம் $6,100 முதல் $6,700 வரை எட்டக்கூடும்.


gold rate silver investment

தங்கம் விலை அசுர வேகத்தில் உயரும்

இது தற்போதைய விலையை விட 30% முதல் 45% வரையிலான உயர்வாகும்.வெள்ளி (சர்வதேச சந்தை): வெள்ளியின் விலை யாரும் ஊகிக்க முடியாத வகையில் ஒரு அவுன்ஸ் $175 முதல் $220 வரை எகிறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 87% முதல் 135% வரையிலான அதிரடி லாபத்தைக் குறிக்கிறது.முன்னதாக கணிக்கப்பட்டிருந்த இலக்குகளான தங்கம் $5,000 மற்றும் வெள்ளி $100 ஆகியவற்றை சந்தை ஏற்கனவே மிக விரைவாகக் கடந்துவிட்டதால், இந்த புதிய மாற்றங்களை குளோபல் டேட்டா செய்துள்ளது.

இந்தியாவில் என்ன பாதிப்பு?

இந்தியாவை பொறுத்தவரை, ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கம் மற்றும் உலகளாவிய விலை உயர்வு ஆகியவற்றால் தங்கம் மற்றும் வெள்ளி சாமானியர்களுக்கு எட்டாக்கனியாக மாறக்கூடும்

தங்கம் (10 கிராம்)₹1.75 லட்சம் முதல் ₹1.95 லட்சம் வரை இந்த ஆண்டு இறுதிக்குள் உயரும்

வெள்ளி (1 கிலோ)₹3.8 லட்சம் முதல் ₹4.6 லட்சம் வரை உயரும்

விலை உயர்வுக்குப் பின்னால் உள்ள மர்மம் என்ன?

இந்த மலைக்க வைக்கும் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது உலகளாவிய அரசியல் பதற்றங்கள் (Geopolitical Uncertainty) தான்.

அமெரிக்காவின் வரி மிரட்டல்: ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா விடுத்துள்ள புதிய வர்த்தக வரி (Tariff) மிரட்டல்கள், முதலீட்டாளர்களைப் பாதுகாப்பான முதலீடான தங்கம் மற்றும் வெள்ளியை நோக்கித் தள்ளியுள்ளது.

வெள்ளிக்கான தட்டுப்பாடு: சூரிய ஒளி மின்சக்தி தகடுகள் (Solar Panels) மற்றும் மின்சார வாகனங்களின் (EV) தயாரிப்பில் வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ற உற்பத்தி இல்லாததால் வெள்ளியின் விலையில் வரலாறு காணாத ஏற்றம் எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு அரண்: போர்க்கால சூழல்கள் மற்றும் பொருளாதார மந்தநிலை அச்சம் காரணமாக, மத்திய வங்கிகள் மற்றும் பெரும் முதலீட்டாளர்கள் தங்கத்தைத் தங்களின் பாதுகாப்புக் கேடயமாகக் கருதி பெருமளவில் சேமித்து வருகின்றனர்.

வெள்ளி விலை உயரும்: வெள்ளி விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருந்தாலும், முதலீட்டு வரத்து அதிகரிக்கும் போது அது தங்கத்தை விட அதிக லாபத்தைத் தரும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.இந்த அதிரடி விலை உயர்வு உங்கள் குடும்பத்தின் திருமணத் திட்டங்கள் அல்லது முதலீடுகளை எப்படிப் பாதிக்கும் என்பதைப் பற்றி முறையாக ஆய்வு செய்து தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்று வல்லுனர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

Credit: Oneindia

English summary
Gold to ₹1.95 Lakh, Silver to ₹4.6 Lakh by 2026: GlobalData’s Big Forecast
Story first published: Friday, January 23, 2026, 7:08 [IST]
Other articles published on Jan 23, 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+