Mankatha Day 5 Box office - மங்காத்தா 5வது நாள் வசூல் இவ்வளவுதானா?.. பாக்ஸ் ஆஃபிஸில் மொத்தமாய் காலி

By Karunanithi Vikraman

சென்னை: அஜித் நடிப்பில் உருவான மங்காத்தா திரைப்படம் 15 வருடங்கள் கழித்து கடந்த 23ஆம் தேதி ரீ ரிலீஸானது. இந்த முறை ரிலீஸின்போதும் ரசிகர்கள் உற்சாகமாக படத்தை கொண்டாடினார்கள். இதன் காரணமாக வெளியாகி சில நாட்களில் பாக்ஸ் ஆஃபிஸை ரூல் செய்துகொண்டிருந்தது மங்காத்தா. ஆனால் ஐந்தாவது நாளான நேற்று அதன் வசூல் மொத்தமாய் படுத்துவிட்டதாகவே தெரிகிறது.

மங்காத்தா திரைப்படத்தை அஜித் ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட மாட்டார்கள். அதற்கு முன்பு அஜித் நடித்த சில படங்கள் படுதோல்வியை சந்தித்து; அவரது கரியரே அவ்வளவுதான் என்ற பேச்சுக்கள் திரைத்துறையில் பரவலாக எழுந்தன. அப்படிப்பட்ட சூழலில்தான் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி வைத்தார் ஏகே. அப்போதும் ரசிகர்களுக்கு பெரிய அளவில் நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தது. ஏனெனில் அஜித் போன்ற பெரிய ஹீரோ படத்தை வெங்கட் எப்படி கையாளப்போகிறார் என்ற பயம் ஏற்பட்டது.

படம் மெகா ப்ளாக் பஸ்டர்: ஆனால் மங்காத்தாவை தனது ஸ்டைலிலும், அஜித்துக்காக மாஸ் காட்சிகளை திகட்டாமல் வைத்தும் உருவாக்கியிருந்தார் இயக்குநர். படத்தின் ஆரம்பத்தில் சில சீன்கள் மட்டும் இதுவும் வழக்கமான வெங்கட் படமாக அமைந்துவிடும் என்ற எண்ணத்தை விதைத்தாலும் திரைக்கதை நகர நகர தியேட்டரே பற்றிக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். அஜித்தின் ஆக்‌ஷன், அஜித் - அர்ஜுன் இடையிலான காட்சிகள், க்ளைமேக்ஸில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் ஆகியவைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.


Mankatha Day 5 Box Office Ajith Film Sees Sharp Drop on Fifth Day Total Collection 11 8 Crore
Photo Credit:

அஜித்தின் வில்லத்தனம்: அனைத்தையும் தாண்டி படத்தில் பெரிய அளவில் கவர்ந்த விஷயங்கள் என்றால் அஜித்தின் வில்லத்தனமான நடிப்பும், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும்தான். ஒவ்வொரு ஃப்ரேமிலும் அஜித் தனது மிரட்டலான ஸ்க்ரீன் ப்ரெசன்ஸை கொடுத்து மொத்தமாக படத்தை தனது தோள்களில் சுமந்தார். யுவனும் அவருக்கு துணையாக மாஸ் பிஜிஎம், கொண்டாட்டமான பாடல்கள் என கொடுக்க பல முறை மங்காத்தாவை ஏகே ரசிகர்கள் திரும்ப திரும்ப பார்த்தார்கள்.

சப்பை கட்டு கட்டாதீங்க விஜய்.. வாயைத் திறந்து பேசுங்க.. என்னங்க இவரே இப்படி சொல்லிட்டாரு

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட மங்காத்தா: இப்படி ஏகப்பட்ட சிறப்புகளை அஜித் ரசிகர்களுக்கும், அஜித்துக்கும் கொடுத்த மங்காத்தா திரைப்படத்தை கடந்த 23ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்தார்கள். சமீபத்தில் பல படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவது கோலிவுட்டில் அதிகரித்திருக்கின்றன. கில்லி, படையப்பா படங்களின் ரீ ரிலீஸை விஜய், ரஜினி ரசிகர்கள் எப்படி கொண்டாடி தீர்த்தார்களோ அதேபோல் அஜித் ரசிகர்களும் கொண்டாட செய்தார்கள்.

வசூல் நிலவரம்: இந்நிலையில் மங்காத்தா திரைப்படம் ரீ ரிலீஸில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. Sacnilk இணையதளத்தின் தரவுகள்படி முதல் நான்கு நாட்களில் அப்படி 11.40 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டது. தற்போது ஐந்தாவது நாளான நேற்று மங்காத்தா செய்திருக்கும் வசூல் குறித்து அந்த இணையதளம் தகவல் வெளியிட்டிருக்கிறது. அதன்படி வெறும் 40 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆக மொத்தம் படமானது இதுவரை 11.8 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தெரிகிறது.

Credit: Filmibeat

English summary
Ajith Kumar’s Mankatha re-release collected 11.40 crore in the first four days, but saw a major drop on Day 5. Here’s the complete box office report.
Story first published: Wednesday, January 28, 2026, 7:13 [IST]
Other articles published on Jan 28, 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+