விஜய் - திரிஷா பற்றிய பேச்சு.. பிரஸ் மீட்டில் எழுந்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலை பாருங்க!

By Vignesh Selvaraj

சென்னை: விஜய் - திரிஷா பற்றிய அநாகரிக பேச்சு குறித்த கேள்விக்கு, "என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை" என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.

சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சாலையில் உள்ள திடலில் பிப்ரவரி 13 ஆம்நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், “அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். எம்ஜிஆர் தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார்” என விஜய் பேசினார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாள்ர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பப்பட்டது.


Nainar Nagendran Responds to Row Over Indecent Remarks on Vijay and Trisha

அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், "பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும். குடும்பங்களுடன் நல்லுறவு வைக்க வேண்டும்." என்றார். நயினார் நாகேந்திரனின் இந்த கருத்தால் தவெகவினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. நயினார் நாகேந்திரனுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரனிடம், பாமக நிறுவனர் ராமதாஸ் நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், "என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை" எனக் கூறியுள்ளார்.

“அடிப்படை அறிவையே நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார்

Credit: Oneindia

English summary
BJP state president Nainar Nagendran has responded to a question about the indecent remarks about Vijay and Trisha, saying, "As far as I am concerned, I have no intention of personally hurting anyone's feelings."
Story first published: Monday, February 16, 2026, 11:08 [IST]
Other articles published on Feb 16, 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+