புது ரூல்ஸ்.. பிப்.15 முதல் அமல்.. இனி ரூ.25000 லிமிட்.. வங்கி கணக்கு இருப்பவர்களுக்கு இதுதான் புது லிமிட்!

By Harihara Sudhan

வங்கி கணக்கு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு வருகிற பிப்ரவரி 15ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 1ஆம் தேதியில் புதிய விதிகள் அமல் செய்யப்பட இருக்கின்றன. பணத்தை அனுப்பும் போது கூடுதல் கட்டணம் முதல் பணத்தை டெபாசிட் செய்யும்போது பான் கார்டு கட்டாயம் வரையில் விதிகள் அமலுக்கு வர உள்ளன. இந்த விதிகளால் என்னென்ன மாறப்போகிறது?

பிப்ரவரி 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் விதிகள் எஸ்பிஐ (SBI) வங்கி கஸ்டமர்களுக்கு மட்டுமே அமல் செய்யப்பட உள்ளது. இதில் ஐஎம்பிஎஸ் (IMPS) பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்பட இருக்கிறது. அதாவது, ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் வழியாக ரூ.25,000 மேல் பணத்தை அனுப்பினால் கூடுதல் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.


New IMPS Rules From February 15 2026

ஆகவே, ரூ.25,000 மேல் ரூ.1,00,000 வரையில் ஆன்லைன் வழியாக ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை செய்தால் ரூ.2 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் இருக்கும். இதே தொகையை கிளை சேனல் வழியாக ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை செய்தால் ரூ.4 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ரூ.1,00,000 மேல் ரூ.2,00,000 வரையிலும் கட்டணம் இருக்கிறது.

ஆன்லைன் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.6 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் இருக்கிறது. அதேபோல கிளை சேனல் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.12 கட்டணம் மற்றும் ஜிஎஸ்எடி கட்டணம் இருக்கிறது. ரூ.2,00,000 மேல் ரூ.5,00,000 வரையில் ஆன்லைன் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.10 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும், கிளை சேனல் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.20 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். ஒருவேளை ரூ.25,000 தொகைக்கும் கீழான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியது கிடையாது. ஆகவே, ரூ.1,000 வரையில் செய்யப்படும் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது. இதில் ஆன்லைன் மற்றும் கிளை சேனலுக்கு பொருந்தும்.

அதேபோல ரூ.1,000 முதல் ரூ.10,000 வரையிலான ஆன்லைன் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் கிடையாது. அதுவே கிளை சேனல் வழியாக ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை செய்தால் ரூ.2 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், ரூ.10,000 முதல் ரூ.25,000 வரையிலான ஆன்லைன் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.


New IMPS Rules From February 15 2026

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய பான் கார்டு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இந்த விதிகள் ஒட்டுமொத்த வங்கி கஸ்டமர்களுக்கும் பொருந்தும். அசையா சொத்தை வாங்கும்போது அல்லது விற்கும்போது பான் கார்டு விவரங்களை கொடுக்க வேண்டிய லிமிட்டானது ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 ஆக அதிகரிப்பட்டுள்ளது. அதேபோல பணத்தை டெபாசிட் செய்யும் லிமிட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் பணத்தை டெபாசிட் செய்யும்போது ஒரு நிதியாண்டில் ஒரு நாளைக்கு ரூ.50,000 மேல் சென்றால் பான் கார்டு விவரங்களை கொடுக்க வேண்டும். இந்த லிமிட் ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ரூ.10 லட்சம் மேல் பணத்தை டெபாசிட் செய்தால் மட்டுமே பான் கார்டு விவரங்கள் கேட்கப்பட இருக்கிறது.

மேலும், நிதிாண்டில் ரூ.10 லட்சம் தொகைக்குள் ரொக்கமாக எடுத்தால் பான் கார்டு விவரங்கள் கேட்கப்படாது. ஆனால், ரூ.10 லட்சம் மேல் பணத்தை எடுத்தால் பான் கார்டு விவரங்களை கொடுக்க வேண்டும். இந்த விதிகளை ஆர்பிஐ என்று அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்திய அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த விதிகள் அமலுக்கு வர உள்ளன.

Credit: Gizbot

English summary
New IMPS Rules From February 15 PAN Card Rules From April 1 Bank Account Holders Need To Know This
Story first published: Saturday, February 14, 2026, 11:32 [IST]
Other articles published on Feb 14, 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+